என்ன செய்தால் முழங்கால் வலியை தவிர்க்கலாம்?
How to Prevent Knee Pain: முழங்கால் வலி உங்களை பாடாய்படுத்துகிறது என்றால், அதனை வீட்டு வைத்தியம் மூலம் எளிதாக குணப்படுத்தலாம்.
Knee Pain Home remedies : முழங்கால் வலி இப்போதெல்லாம் வயது வித்தியாசம் இல்லாமல் வந்து கொண்டிருகிறது. மூட்டு வலி வந்தவுடனே மருத்துவமனைக்கு செல்லலாம் என நினைக்கிறார்கள். பொதுவாக குளிர்காலத்தில் மூட்டுவலி, முழங்கால் வலி பிரச்சனை அதிகரிக்கும். தசை பிடிப்பு பிரச்சனைகளும் அதிகரிக்கும். இதனை வீட்டு வைத்தியம் மூலம் குணப்படுத்துவது எப்படி? என்பதை பார்க்கலாம்.
வெந்தயத் தண்ணீர்
வெந்தய விதை தண்ணீரை வெறும் வயிற்றில் குடிப்பதால், முழங்கால் வலியிலிருந்து நிவாரணம் கிடைக்கும். இதன் மூலம் ஆரோக்கியத்திற்கும் பல அற்புதமான நன்மைகள் வரும். வெந்தய நீர் எடை இழப்பு, முடி வளர்ச்சி, நல்ல செரிமானம், பெண்களின் ஆரோக்கியம் மற்றும் கெட்ட கொழுப்பைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
சூடான எண்ணெய் மசாஜ்
முழங்கால் வலி குறைய, வெயிலில் அமர்ந்து வெதுவெதுப்பான எண்ணெயைக் கொண்டு மசாஜ் செய்யவும். மசாஜ் செய்ய, எள் எண்ணெயில் கற்பூரம் அல்லது ஆமணக்கு எண்ணெயுடன் பூண்டு எண்ணெயைக் கலந்து மசாஜ் செய்யவும்.
கால் பயிற்சிகள்
மூட்டு வலியிலிருந்து நிவாரணம் பெற, மிகச் சிறந்த வழி உடற்பயிற்சி தான். நாள் ஒன்றுக்கு காலை மாலை என இரண்டு முறை செய்ய வேண்டும். முதல் பயிற்சி என்னவென்றால், தரையில் உட்கார்ந்து, உங்கள் கால்விரல்களை முன்னும் பின்னுமாக அசைக்கவும். இரண்டாவது பயிற்சியில், சுவரில் காலை முட்டி விரல்களை மேல் நோக்கியும், கீழ் நோக்கியும் அசைக்கவும். மூன்றாவது பயிற்சியில், தரையில் உட்கார்ந்து எழுந்து பயிற்சி செய்யவும். இதுதவிர இன்னும் பல பயிற்சிகளும் இருக்கின்றன. அதில் உங்களுக்கு உகந்த ஒன்றை தேர்வு செய்து அதனை பயிற்சி செய்யலாம்.
ராகி ரொட்டி
முழங்கால் வலிக்கு மிக முக்கிய காரணம் கால்சியம் குறைபாடு. இதனை போக்க அதற்கு ஏற்ற உணவுகளை சாப்பிட வேண்டும். ராகி ரொட்டி, ராகி இட்லி, ராகி லட்டு, ராகி சூப், ராகி தோசை போன்றவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். மேலும், பால் பொருட்களையும் சாப்பிட்டால் கால்சியம் குறைப்பாட்டை தவிர்க்கலாம். மூட்டு வலி, முழங்கால் வலி பிரச்சனையும் தீரும்.
மேலும் படிக்க | Lord Shiva: சிவ பூஜையில் செய்யக்கூடாத விஷயங்கள்: சிவனுக்கு உவப்பில்லா பொருட்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ