SeePics: கிழிந்த Jeans Phant-ஐ இப்படியும் பயன்படுத்தலாமா?
கிழிந்த Jeans Phant-களை மீண்டும் அழகாக மாற்றி பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா?
கிழிந்த Jeans Phant-களை மீண்டும் அழகாக மாற்றி பயன்படுத்துவது எப்படி என்று தெரியுமா?
Jeans Phant என்றால்.... இளைஞர்களின் நினைவுக்கு வருவது "ஒரு இரண்டு மாத்ததிற்கு துவைக்காமல் அணிந்துக்கொள்ளலாம், குளிருக்கு அடக்கமாய் அணிந்துக்கொள்ளலாம் என்பது தான். இதைவிடவும் முக்கியமான காரணம், அதிக ஆண்டுகளுக்கு பயன்படுத்தலாம் என்பது தான்...
Jeans Phant என்றாலும் குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு கிழிந்து தானே ஆகவேண்டும்.. தற்போது கிழிந்த Jeans Phant-னையும் நவநாகரீகம் என்ற பேரில் இளைஞர்கள் அணிந்து வருகின்றனர். இந்த நவநாகரீகத்திற்கு பின்னரும் இதனை பயன்படுத்தப்படாமல் போகும் பட்சத்தில் இந்த Jeans Phant-களை மீண்டும் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் வழக்கம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
வீனாகும் பொருட்களை பயனுள்ளதாக மாற்றும் ஓர் குழு, கிழிந்த Jeans Phant-களை செடி வளர்க்கும் தொட்டிகளாக மாற்றி பயன்படுத்தலாம் என அனைவருக்கும் எடுத்துரைத்து வருகின்றனர். இந்த தொட்டிகளை எவ்வாறு செய்வது, அதில் எப்படி செடிகளை பராமரிப்பதென இந்த குழு வெளியிட்டு வரும் வீடியோக்கள் தற்போது இணையத்தில் ட்ரண்ட் ஆகி வருகின்றது.
இந்த அளங்காரத்திற்க் பெயர் கிரியேட்டிவிட்டி என சிலர் பெயர் சூட்டினால், கலையார்வம் என சிலர் பெயர் சூட்டுகின்றனர். எதுவாக இருந்தால் என்ன நமக்கு மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செயல்பாடாக இருந்தால் போதாதா...