Reduce Auto Loans: கார் வாங்க ஆசைப்பட்டு, லோன் வாங்கி நொந்து நூலானவரா நீங்கள்? எப்படி கார் லோன் பிரச்சனையை தீர்ப்பது? தெரிந்துக் கொள்ளுங்கள். வட்டி விகிதங்களை வங்கிகள் அதிகரித்து வரும் நிலையில், ஏற்கனவே உள்ள கடனை அடைக்கவே திண்டாடிக் கொண்டிருக்கும் சாமானிய மக்களுக்கு, கடன் தவணையை திருப்பிச் செலுத்துவது என்பது மிகப் பெரிய கவலையாக உள்ளது. அதிலும், பலருக்கு வாகனக் கடன் இருக்கும், கார், பைக் என வாகனக் கடன் வாங்கியவர்கள் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், புதிதாக வாகனம் வாங்க கடன் வாங்க நினைப்பவர்கள் 4 விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொண்டால், கடன் சுமை அழுத்தாது.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்றைய காலகட்டத்தில் புதிய கார் வாங்குவது மிகவும் எளிதாகிவிட்டது. கார் வாங்க போதுமான பணம் இல்லையென்றால், கடனில் காரை வாங்கலாம். கார் கடன் வாங்கும் செயல்முறையையும் நிறுவனங்கள் எளிதாக்கியுள்ளன. உங்கள் வருமானம் மற்றும் திருப்பிச் செலுத்தும் திறனைப் பார்த்து வங்கிகள் கார் கடனை கொடுக்கின்றன. 


மேலும் படிக்க | Home Loan: வீட்டுக் கடன்களுக்கான வட்டிகள் உயர்ந்தன! ரெப்போ ரேட் உயர்வின் எதிரொலி 


பட்ஜெட்


பட்ஜெட்டை முதலில் முடிவு செய்துக் கொள்ளுங்கள்: நீங்கள் வாங்கும் கடனை வைத்து எந்த காரை வாங்க வேண்டும் என்பதை முடிவு செய்யாதீர்கள். உங்கள் பட்ஜெட் மற்றும் செலவுகளை கருத்தில் கொண்டு வாகனத்தை தேர்வு செய்யவும். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் எளிதாக கார் லோனை வாங்கலாம் என்பதோடு, எந்த தொந்தரவும் இல்லாமல் கார் தவணையையும் செலுத்த முடியும். இஎம்ஐ உங்கள் சம்பளத்தில் 10% என்ற அளவை விட அதிகமாகமல் பார்த்துக் கொள்ளவும்.  


எத்தனை ஆண்டுகள் கடன் தேவை?


வாங்கும் கடனை எவ்வளவு ஆண்டுகளில் திருப்பிச் செலுத்துவது என்பதையும் கவனத்தில் கொள்ளவும். இதுவும் ஒரு முக்கியமான காரணியாகும். அதிகபட்சம் 4 வருடங்களுக்கு கார் கடன் வாங்குவது சரி என்று கருதப்படுகிறது. ஒரு காருக்கு 4 ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம் அல்ல. அதாவது முதல் சில வருடங்களிலேயே வாகனம் உங்களுடையதாக மாறிவிடும்.


மேலும் படிக்க | SBI: என்ஆர்ஐ வட்டி விகிதங்களை அதிகரித்தது எஸ்பிஐ! வட்டி விகிதம் & கால்குலேட்டர்


தகுதி மற்றும் சலுகைகள்


தகுதி என்பது, நீங்கள் வங்கியில் கடன் வாங்குவதற்கான அளவுகோல்களுக்கு பொருந்துகிறதா இல்லையா என்பதாகும். கடனுக்கு வட்டி எவ்வளவு என்பது மிகவும் முக்கியமானது. உங்கள் தகுதி மற்றும் மாடலைப் பொறுத்து கார் கடன்களுக்கு பல திட்டங்களை வழங்கும் வங்கிகள் பல உள்ளன. அத்தகைய சூழ்நிலையில், கடனுக்கு விண்ணப்பிக்கும் போது சிறந்த திட்டம் எது என்பதை வங்கியிடம் பேசி முடிவு செய்யுங்கள்.


கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவது


உங்கள் கடனை எவ்வளவு விரைவில் திருப்பிச் செலுத்துகிறீர்களோ, அவ்வளவு குறைவான வட்டியை நீங்கள் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, போனஸ் அல்லது வேறு ஏதேனும் வகையில் உங்கள் கைக்கு பணம் வந்தால், கடனுக்கான அசல் தொகையைத் திருப்பிச் செலுத்த அதைப் பயன்படுத்தலாம்.


மேலும் படிக்க | தன்பாலின திருமண மசோதாவில் அதிபர் ஜோ பிடன் எப்போது கையெழுத்திடுவார்?


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ