பணத்தை சேமிப்பது எப்படி.. 5 ஸ்மார்ட் டிப்ஸ்..!
மாத வருமானத்தை சேமித்து எதிர்காலத்தை வளமானதாக மாற்ற சிறந்த 5 வழிமுறைகளை பார்க்கலாம்.
1. செலவை பதிவு செய்யுங்கள்
ஒரு நாள் கூட ஓய்வெடுக்காமல் பணியாற்றும் நாம், அதன் மூலம் வரும் வருமானத்தை கையில் வைத்துக்கொண்டு கணக்கு வழக்கு தெரியாமல் செலவு செய்வோம். எங்கு? எப்போது? எதற்காக? செலவு செய்தோம் என்று யோசனைக்குக் கூட எட்டாத வகையில் பணத்தை செலவளித்திருப்போம். நாம் முதலில் மாற்றிக்கொள்ள வேண்டியது இதுதான். ஒரு மாதத்தில் நாள்தோறும் நாம் எதற்காக எவ்வளவு பணத்தை செலவிடுகிறோம் என்பதை குறித்து வைக்க வேண்டும். தேதியுடன், காரணத்துடன் அதை குறித்து வைக்கும்போது தேவையற்ற செலவு எது என்பதை நம்மால் எளிதாக கண்டு பிடிக்க முடியும். பணத்தை சேமிப்பதில் கடைசி படிக்கட்டை எட்ட வேண்டும் என்றால் இந்த முதல் படியை தாண்டியே ஆக வேண்டும்.
2. பட்ஜெட்டை திட்டமிடுங்கள்
இரண்டாவது படிக்கட்டு நமக்கான மாதாந்திர பட்ஜெட்டை உருவாக்குவது. முதல் படியில் நமது மாத செலவு என்ன எவ்வளவு என்பது தெரிய வந்திருக்கும் அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு, ஒரு செலவினம் குறுகிய பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். குறிப்பாக சம்பள தொகையை நான்காக பிரித்து செலவு செய்யலாம். முதலாவதாக வீடு மற்றும் உணவுக்காக சம்பளத்தின் 30 சதவீதம் தொகையை ஒதுக்கலாம். நமது அன்றாட செலவு உள்ளிட்ட சில விஷயங்களுக்காக 30 சதவீதம் தொகையை ஒதுக்கலாம். கடன்களுக்காக 20 சதவீதம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் மற்ற விஷயங்களுக்காக பணத்தை எவ்வளவு ஒதுக்கீடு செய்து செலவளிக்கிறோமோ அதேபோல், சேமிப்பிற்கென குறைந்த பட்சம் 10 முதல் 20 சதவீதம் வரை சம்பளத்தொகையை ஒதுக்க வேண்டும். அதற்கான முழு முயற்சியையும், பங்கீட்டையும் வழங்க வேண்டும்.
மேலும் படிக்க | LIC IPO: நீங்கள் எல்ஐசி பாலிசிதாரரா? உங்களுக்கு உள்ளது ஐபிஓ-வில் சிறப்பு சலுகை
3. செலவை குறைத்து சேமிப்பை கூட்டுங்கள்
சேமிக்க ஆரம்பித்த பிறகு..,மேலும் முக்கியத்துவம் குறைந்த செலவுகளை படிப்படியாக குறைத்துக்கொண்டு சேமிப்பை கூட்ட வேண்டும். அதோடு கூடவே நமக்கான ஒரு இலக்கை குறிப்பிட்ட ஆண்டுக்குள் அடைய வேண்டும் என்ற நோக்கத்தை முன்வைத்து பயணிக்க ஆரம்பிக்க வேண்டும். எடுத்துக்காட்டாக சொல்ல வேண்டும் என்றால் 5 ஆண்டுகளுக்கு பிறகு நீங்கள் வீடு கட்ட வேண்டும் என நினைக்கிறீர்கள் என்றால் அப்போது உள்ள செலவீனங்களை அடிப்படையாக கொண்டு அதற்கான சேமிப்பை தொடங்க வேண்டும்.
4. சேமித்த தொகையில் முதலீட்டைத் தொடங்குங்கள்
பணத்தை சேமித்த பிறகு அதை இரட்டிப்பாக்க வேண்டும் என்ற நோக்கம் வேண்டும். அதற்காக சேமித்த பணத்தை மூதலீடு செய்து அதற்கான வட்டிக்கும்.., வட்டியின் வட்டிக்கும் வட்டி பெற்று முதலீடு செய்த பணத்தை கூட்ட வேண்டும். அதற்கான ஆலோசனையை முதலீட்டு நிபுணர்களிடம் கேட்டு தெரிந்துகொண்டு அதை செய்யலாம். எடுத்துக்காட்டாக இந்த ஆண்டு 1 லட்சம் ரூபாய் கொடுத்து 1 செண்ட் நிலம் வாங்குகிறீர்கள் என்றால் அதன் மதிப்பு அடுத்த ஆண்டில் இரட்டிப்பாக இருக்கும். அதேபோன்று லாபச்சீடு போடுவது, தங்கத்தின் மீது முதலீடு உள்ளிட்டவைகளை முன்னிறுத்தி அசலை இரட்டிப்பாக்கலாம். இவை அனைத்தும் உடனே நடத்துவிடாது. பொருமையாக இருந்து சேமிப்பை முதலீடு செய்து மீண்டும் சேமிக்க வேண்டும்.
5. சேமித்த தொகைக்கான நிதி இலக்கை நிர்ணயம் செய்யுங்கள்
சேமித்த பணத்தை எதிர்காலத்தின் முக்கியத்துவம் அறிந்து அதை பாதுகாத்து வைக்க வேண்டும். வயது முதிர்வின்போதோ அல்லது குழந்தைகளின் உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு தேவைகளுக்காக அவை பயன்படலாம். இதனை நோக்கமாக கொண்டு குறுகிய கால, இடைக்கால மற்றும் நீண்ட கால இலக்குகளை வைத்து சேமித்த பணம் பாதுகாக்கப்பட வேண்டும். வாழ்கையில் ஏற்படும் பல்வேறு சூழ்நிலைகளில் இந்த திட்டம் உங்களுக்கு முதுகெலும்பாக இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
மேலும் படிக்க | Bank Holidays May 2022: மே மாதத்தில் 14 நாட்கள் வங்கி விடுமுறை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYe