Fasting health Tips Tamil : ஆடி மாதம் தொடங்கிவிட்டதால் இஷ்ட தெய்வங்களுக்கு விரதம் இருக்கிறார்கள். இதற்காக உணவு முறையையும் பக்தர்கள் பலர் மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். விரதம் இருந்தாலே உடல்  எடை குறையும். தொடர்ச்சியாக விரதம் இருக்கும்போது எடை மளமளவென குறையவும் வாய்ப்பு இருக்கிறது. ஏனென்றால் விரதம் இருப்பது நேரடியாக ஆரோக்கியத்தோடு தொடர் கொண்டிருப்பதால், சாப்பிடும்போது என்னென்ன உணவுகளை சாப்பிட வேண்டும், எப்படி சாப்பிட வேண்டும் என்பதையும் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். அதனால், விரதத்தின்போது கட்டாயம் கவனத்தில் கொள்ள வேண்டிய நான்கு விஷயங்கள் இருக்கின்றன. அவை என்ன என்பதை பார்க்கலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்களை பார்த்தவுடன் பிடிக்க வேண்டுமா? ‘இந்த’ உடல்மொழிகளை கற்றுக்கொள்ளுங்கள்!


சமச்சீர் உணவு


விரதம் இருக்கிறீர்கள் என்றாலே, அடுத்து சாப்பிடும் உணவு சமச்சீராக இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். ஏனென்றால் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள், தாதுக்கள் அந்த நேரத்தில் கிடைக்காமல் போக வாய்ப்பு இருக்கிறது. எனவே, காய்கறிகள், பழங்கள், நட்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். 


தண்ணீர் அவசியம் குடிக்கவும்


விரதம் இருக்கும்போது மற்ற நாட்களைக் காட்டிலும் அதிகமாக தண்ணீர் குடிக்க வேண்டும். அப்போது தான் உடல் நீரேற்றமாக இருக்கும். ஒருவேளை போதுமான தண்ணீர் குடிக்கவில்லை என்றால் மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். இது ஆரோக்கியத்துக்கும் நல்லதல்ல என்பதால் விரதம் இருக்கும் நாளில் கூடுதல் தண்ணீர் குடிப்பதில் விசேஷ கவனம் எடுத்துக் கொள்ளுங்கள்.  


கலோரிகள் அளவில் கவனம்


விரதம் இருக்கும்போது உடலுக்கு தேவையான கலோரிகள் கொண்ட உணவை சாப்பிட்டால் போதுமானது. ஆனால், விரதம் இருக்கிறோம் என்ற பெயரில் நொறுக்குத் தீனிகளை அதிகம் சாப்பிடக்கூடாது. குறிப்பாக, பொறித்த மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடக்கூடாது. அதனால், விரதம் இருப்பதால் உங்கள் உடலுக்கு கிடைக்ககூடிய பலன்கள் கிடைக்காமல் போவதுமட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தை கெடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 


சாதாரணமான உடற்பயிற்சி


நீங்கள் வழக்கமாக உடற்பயிற்சி செய்கிறீர்கள் என்றால், விரதம் இருக்கும் நாளில் சாதாரணமான உடற்பயிற்சியை மட்டும் செய்யுங்கள். அதீத உடற்பயிற்சி செய்வதை தவிர்த்துவிடுங்கள். ஏனென்றால், தொடர்ச்சியான விரதத்தின்போது அதீத உடற்பயிற்சி செய்வது என்பது ஆரோக்கியத்து நல்லதல்ல, அது உங்களை மேலும் பலவீனமாக்கவும் வாய்ப்பு இருக்கிறது. 


விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள்


பொதுவாகவே விரதம் இருப்பது என்பது ஆரோகியமானது. விரதம் இருப்பதால் செரிமான மண்டலம் மேம்படும். குடல் அமைப்புகள் சீராக இயங்கவும், அதன்  செயல்முறைகளை மீட்டுருவாக்கம் செய்து கொள்ளவும் விரதம் உதவியாக இருக்கிறது. அதனால், வாரம் ஒருமுறையாவது ஒருவேளை விரதம் இருப்பது நல்லது என மருத்துவ நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஏதேனும் உடல்நிலை சிக்கல்களை எதிர்கொண்டிருப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் விரதம் இருப்பது நல்லது.


மேலும் படிக்க | பல்லிகளை பக்குவமாக விரட்ட.. ‘இந்த’ வாசனை திரவியத்தை யூஸ் பண்ணுங்க..


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ