மனதிற்குள் பயம் இருந்தாலும் வெளியில் தைரியமாக இருப்பது எப்படி? ‘இதை’ செய்யுங்கள்..
நம்மில் பலர், உள்ளுக்குள் தைரியமாக இல்லை என்றாலும் வெளியில் தைரியமாக இருக்க வேண்டும் என்று நினைப்போம். அப்படி இருக்க வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் தெரியுமா?
வாழ்வில் எத்தனையோ தருணங்களை கடந்து வந்திருப்போம். அதில் சில, நமக்கு நல்ல நினைவுகளை கொடுத்த தருணங்களாக இருக்கலாம். சில, மிகவும் கெட்ட தருணங்களாக அமைந்திருக்கலாம். இது குறித்து பின்னாளில் யோசிக்கும் போது, “அன்று நாம் அப்படி பயப்படவில்லை என்றால், இந்த விஷயத்தை நன்றாக சமாளித்திருக்கலாம்” என்று யோசிப்போம். இப்படி, பல சமயங்களில் பய உணர்வு நம்மை ஆட்கொண்டு விடுவதால் பல்வேறு விஷயங்களை இழந்திருப்போம். நம் மனதிற்குள் பயம் இருந்தாலும், அதை எப்படி முகத்தில் காட்டாமல் இருக்க வேண்டும் தெரியுமா? இங்கு அதற்கான டிப்ஸை பார்ப்போம்.
நிமிர்ந்த தோரணை:
பய உணர்வு ஏற்படும் போது, நம்மில் பலர் கூன் போட்டு மிகவும் சிறுமையாக உணர்ந்து குணிந்து அமர்ந்திருப்போம். இதை பார்த்தவுடன் பலருக்கு நாம் பயத்தில் இருக்கிறோம் என்பது தெரிந்து விடும். அப்படி இல்லாமல், நம் தோள்பட்டையையும் தலையையும் நேராக வைத்து, நிமிர்ந்து நிற்க வேண்டும். அப்போதுதான் நமக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என பிறர் நினைப்பர்.
மூச்சுப்பயிற்சி:
பய உணர்வு ஏற்படும் போது, மூச்சுப்பயிற்சி செய்ய ஆரம்பிக்க வேண்டும். முதலில், மிகவும் மெதுவாக மூச்சை இழுத்து விட வேண்டும். இது, நமது நரம்பு மண்டலத்தையும் உடலையும் அமைதிப்படுத்த உதவும். முதலில் மூக்கினால் மூச்சை இழுத்து விட்டு பின்பு வாயினால் வெளியேற்ற வேண்டும். சிலருக்கு பயத்தினால் உடல் நடுங்கும். அந்த நடுக்கத்தையும் சமாளிக்க உதவுகிறது, மூச்சுப்பயிற்சி.
மேலும் படிக்க | திருமண உறவில் புரிதலை அதிகமாக்க... தம்பதிகள் செய்ய வேண்டியவை என்னென்ன?
பேசும் தொனி:
நாம் பயந்து பேசும் போது, பல சமயங்களில் நமது குரல் வெளியிலேயே கேட்காது. இதனால், எதிரில் நிற்கும் நபருக்கு நீங்கள் பயப்படுகிறீர்கள் என்பது தெரிந்து விடும். எனவே, உங்கள் குரல் உறுதியானதாக இருக்க வேண்டும். ஆனால், அது சத்தமானதாக இருக்க கூடாது.
கண்களை பார்க்க வேண்டும்:
நீங்கள் ஒரு நேர்காணலுக்கு செல்கிறீர்கள் என்றால், கண்டிப்பாக பயமும் பதற்றமும் இருக்கும். ஆனால், அந்த பயத்தினால் எதிரில் இருக்கும் நபரின் கண்களை பார்க்காமல் இருந்து விட கூடாது. நீங்கள் எதிரில் இருக்கும் நபரின் கண்களை பார்த்து பேசும் போதுதான், அவர் உங்களுக்கு தன்னம்பிக்கை இருக்கிறது என்பதை நம்புவார்.
உங்களுக்குள் நீங்களே பேசிக்கொள்வது:
ஒருவர், தனக்குள்ளேயே பேசிக்கொள்வதை பலர் பைத்தியக்கார தனமாக நினைக்கின்றனர். ஆனால் உண்மையில், மிகவும் அறிவுப்பூர்வமான நபர்கள் தங்களுக்குள் தாங்களே அதிகமாக பேசிக்கொள்வராம். இதனால், அவர்களுக்கு எந்த சூழலையும் கடந்து போக தைரியம் பிறக்கும் என கூறப்படுகிறது. எனவே, நீங்கள் பயத்துடன் உணரும் சமயங்களில் கண்ணாடி முன்பு நின்று உங்களுக்கு நீங்களே தைரியம் கொடுத்துக்கொள்ளுங்கள்.
உடல் மொழி:
உங்கள் பயத்தை வெளிப்படுத்தாத உடல் மொழியை நீங்கள் உபயோகிக்க வேண்டும். உட்காரும் போது காலை ஆட்டிக்கொண்டே இருப்பது, ஆடைகளின் முனைகளை பிடித்துக்கொண்டிருப்பது போன்ற விஷயங்களை செய்யாமல், உடலை உங்கள் கண்ட்ரோலில் கொண்டு வாருங்கள்.
உதவியை நாடுதல்:
இந்த பய உணர்வு, உங்களுக்கு அதிக பதற்றத்தையும், மன ரீதியான பிரச்சனைகளையும் தருவதாக இருந்தால், அப்போது ஒரு நல்ல மன நல ஆலோசகரிடம் உதவி கேட்பதில் எந்த தவறும் இல்லை.
மேலும் படிக்க | கெத்தாக உங்களை காட்டிக்கொள்ள..‘இந்த’ உடல் மொழிகளை பின்பற்றுங்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ