பதற்றத்தை உடனே கட்டுப்படுத்த என்ன செய்ய வேண்டும்? ‘இதை’ ஃபாலோ பண்ணுங்க..

Anxiety Control Exercises : நம்மில் பலர், பதற்றத்தால் பல சமயங்களில் நம்மை நாமே மறப்பதுண்டு. இந்த மாதிரியான சூழ்நிலைகளில் பதற்றத்தை கண்ட்ரோல் செய்வது எப்படி? இங்கு பார்ப்போம். 

Anxiety Control Exercises : பதற்றம் என்பது, மனிதனுக்கு வருவது சகஜம். ஆனால், அதை எப்படி ஒருவர் கையாள்கிறார் என்பதை வைத்துதான் அவரது குணாதிசயமே தீர்மானிக்கப்படும். பதற்றத்தால் பாதிக்கப்படுவோரால் பல சமயங்களில் ஒழுங்காக யோசிக்க முடியாது. இதனால், நாம் தைரியமாக உணர வேண்டிய தருணங்களில் கூட, அவ்வாறு உணராமல் போய் விடமுடியும். எனவே, அதை கட்டுக்குள் கொண்டுவர நாம் சில முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

1 /7

பதற்றத்தை கட்டுப்படுத்தவும், மனதை சாந்தப்படுத்தவும் சில விஷயங்களை நாம் செய்ய வேண்டியிருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா?

2 /7

மூச்சுப்பயிற்சி: மூச்சுப்பயிற்சி செய்வது, உடலுக்கும் மனதுக்கும் நன்மை பயக்கும். மார்பு மீது குறுக்காக கை வைத்து, மூச்சு விட வேண்டும். அப்படி செய்யும் போது, உங்கள் கண்களை மூடிக்கொண்டு ரிலாக்ஸ் செய்ய வேண்டும். 

3 /7

கற்பனை: கண்களை மூடி, நீங்கள் பதற்றமற்ற நிலையில் தற்போது இருக்கும் சூழ்நிலையை எப்படி கையாள்வீர்கள் என்று நினைத்து பார்க்க வேண்டும். நீங்கள் தைரியமாக இருக்கும் போது எப்படி இருப்பீர்கள், என்ன செய்வீர்கள் என்பதை நினைவுகூற வேண்டும். 

4 /7

இசை கேட்பது: உங்களை மகிழ்ச்சிப்படுத்தும் அல்லது சாந்தப்படுத்தும் இசை அல்லது பாடலை கேட்கவும். இது உங்களது மனநிலையை சற்று தூக்கி விடும். 

5 /7

பாசிடிவாக யோசிக்க வேண்டும்: நாம் நம்மை பற்றி மிகவும் தவறான எண்ணங்களை கொண்டிருந்தாலோ, அல்லது குறைவாக மதிப்பிட்டுக்கொண்டாலோ, அது கண்டிப்பாக நமது மன நிலையையும் தாக்கும். எனவே, நாம் நமக்குள் முதலில் பாசிடிவாக பேசிக்கொள்ள வேண்டும். 

6 /7

கேள்விகள்: பதற்றமான சூழ்நிலைகளில், நாம் ஏன் இப்படி உணர்கிறோம் என்பதையும் இதை சரி படுத்த நம் கையில் ஏதேனும் இருக்கிறதா? என்று யோசித்து அப்படி எதுவும் இல்லை எனில் அமைதியாக அந்த சூழ்நிலை கடந்து செல்வது நல்லது. 

7 /7

உடற்பயிற்சி: உங்களை சாந்தப்படுத்தும் எந்த உடற்பயிற்சியையும் நீங்கள் செய்யலாம். குறிப்பாக, ஒரு சிலருக்கு stretches செய்தால், மனது சாந்தம் அடைந்த உணர்வு வரும். எனவே, கைகளையும் கால்களையும் நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்யலாம்.