ஆதார் அட்டை புதுப்பிப்பு செய்திகள்: இன்றைய காலகட்டத்தில் ஆதார் கார்டின் பயன்பாடு அதிகமாக அதிகரித்துள்ளது. அரசின் பல திட்டங்களுக்கு ஆதார் அட்டையை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதனுடன், இன்று இந்தியாவில் ஆதார் அட்டை ஒரு முக்கிய அடையாள ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது. மேலும் ஆதார் அட்டை தொடர்பான ஒரு முக்கியமான அப்டேட்டைப் பற்றி மக்கள் தெரிந்து கொள்வது இப்போது மிகவும் முக்கியமாகும். அந்த வகையில் ஆதார் அட்டையை அவ்வப்போது அப்டேட் செய்வதும் மிக அவசியம். ஒவ்வொரு 10 வருடங்களுக்கு ஒருமுறை கார்டைப் புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாகும். இதற்காக, ஆதார் வழங்கும் அரசு நிறுவனமான யுஐடிஏஐ மூலம் பிரச்சாரமும் நடத்தப்படுகிறது. இதன் கீழ் உங்கள் ஆதார் அட்டையை டிசம்பர் 14 வரை ஆன்லைனில் நீங்கள் இலவசமாக புதுப்பித்துக் கொள்ளலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆதார் அட்டையில் என்ன புதுப்பிக்க வேண்டும்:
ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் இந்தக் காலக்கட்டத்தில் பெயர், முகவரி, பிறந்த தேதி, பாலினம், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்ட மக்கள்தொகைத் தரவை எந்தவிதக் கட்டணமும் இன்றி புதுப்பிக்கலாம். இருப்பினும், அவர்கள் தங்கள் கருவிழி, புகைப்படம் அல்லது பிற பயோமெட்ரிக் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும் என்றால், ஆதார் பதிவு மையத்திற்குச் சென்று அதற்கான கட்டணத்தைச் செலுத்தி மட்டுமே புதிப்பிக்க முடியும். அதுமட்டுமின்றி ஆதார் பதிவு, விண்ணப்பம் மற்றும் பிவிசி கார்டின் நிலையை அறிய, நீங்கள் UIDAI கட்டணமில்லா எண்ணை 1947 ஐ அழைக்கலாம். இங்கு பல இந்திய மொழிகளில் 24 மணிநேரமும் தகவல்களைப் பெறலாம்.


மேலும் படிக்க | வங்கியின் ஜாக்பாட் பரிசு... அதிக வட்டியுடன், கணக்கில் அதிக பணம் கிடைக்கும்


ஆதார் அட்டையை எவ்வாறு புதுப்பிப்பது:
இதற்கு முதலில் ஆதார் இணையதளத்திற்கு செல்லவும். மொபைல் OTP மூலம் உள்நுழையவும். பெயர்/பாலினம்/பிறந்த தேதி மற்றும் முகவரி புதுப்பிப்பை கிளிக் செய்யவும். இப்போது அப்டேட் ஆதார் ஆன்லைனில் கிளிக் செய்யவும். இதற்குப் பிறகு, முகவரி விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் ஆதாரை புதுப்பிக்க தொடரவும் என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் முகவரியைப் புதுப்பிக்கும் ஆவணத்தைப் பதிவேற்றவும். இதற்குப் பிறகு SRN உருவாக்கப்படும். அதன் உதவியுடன் உங்கள் விண்ணப்பத்தை டிராக் செய்துக்கொள்ளலாம்.


உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவை லாக் செய்யவும்:
இதற்கிடையில் உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவை எவ்வாறு லாக் செய்வது மற்றும் இந்தியாவில் ஆபத்தான மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.


அனைத்து வகையான மோசடிகளிலிருந்தும் பாதுகாப்பாக இருக்கவும், உங்கள் ஆதார் அட்டை பயோமெட்ரிக் தரவை அப்படியே வைத்திருக்கவும், உங்கள் பயோமெட்ரிக் தரவை லாக் செய்ய வேண்டும். இதைச் செய்ய, கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்- 


* முதல் படி UIDAI - uidai.gov.in இன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும். 
* முகப்புப் பக்கத்தில், 'எனது ஆதார்' மெனுவில், 'ஆதார் சேவைகள்' அமைப்பைக் கண்டறிந்து, அதற்குக் கீழே 'பயோமெட்ரிக்ஸைப் லாக்/திறத்தல்' என்ற விருப்பத்தைக் காணலாம்; அதை கிளிக் செய்யவும்.
* இப்போது, ​​உங்களின் 12 இலக்க ஆதார் எண் மற்றும் OTP ஐ உள்ளிடவும், அது உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்படும். 
* OTP-ஐ உள்ளிட்ட பிறகு, உங்கள் ஆதார் பயோமெட்ரிக் தரவைப் லாக் செய்து, மோசடியில் இருந்து உங்களைப் பாதுகாக்கவும்.


மேலும் படிக்க | ரூ.5,ரூ.10, ரூ.20 நாணயங்கள்: ரிசர்வ் வங்கி அளித்த முக்கிய தகவல்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ