Curd For Hair: வெயிலில் காலத்தில் அதிக வெப்பம் மற்றும் வியர்வை காரணமாக பலருக்கும் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது. தலையில் அதிகம் வியர்வை ஏற்பட்டால் இதன் மூலம் அழுக்கு படிக்கிறது. இது முடியை உதிர செய்கிறது. அதிக வெயில் முடியின் ஈரப்பதத்தை குறைத்து, முடிக்கு வறட்சியை ஏற்படுத்துகிறது. இதனால் முடியின் ஊட்டச்சத்து குறைந்து, முடி வேகமாக கொட்ட தொடங்குகிறது. தினசரி முடிக்கு எண்ணெய் தடவுவது ஈரப்பதம் மற்றும் ஊட்டச்சத்துக்கு நல்லது. ஆனால் எண்ணெய் தடவினால் முடி பிசுபிசுவென இருக்கும் என்று எண்ணெயைப் பயன்படுத்துவதில்லை. இது போன்ற சூழலில் முடிக்கு தயிரை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும். முடிக்கு தயிர் தடவினால் முடி உதிர்தல் பிரச்சனை உட்பட பல விஷயங்கள் சரியாகும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | இந்த பழத்தின் இலை ஒன்று போதும், சுகர் லெவல் பட்டுன்னு குறையும்


முடிக்கு தயிரை எப்படி பயன்படுத்துவது?


- முடியில் ஏற்படும் வறட்சி காரணமாக முடி உதிர்வு அதிகமாகிறது. இது போன்ற சூழல் தயிருடன் தேன் சேர்த்து முடிக்கு தடவலாம். இந்த கலவை முடியை மென்மையாக்கி, பட்டுப் போலவும், பளபளப்பாகவும் மாற்றுகிறது. ஒரு கப் தயிரில் சிறிது தேன் கலந்து நன்கு காயவிடவும். பிறகு தண்ணீர் கொண்டு கழுவினால் முடி உதிர்வு பிரச்சனை குறையும்.


- வாழைப்பழம் குடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமில்லாமல் முடிக்கு ஊட்டமளிக்கிறது. தயிருடன் வாழைப்பழத்தை சேர்த்து முடிக்கு பயன்படுத்தினால் நல்ல மாற்றம் கிடைக்கும். தயிர் மற்றும் வாழைப்பழத்தால் செய்யப்பட்ட ஹேர் மாஸ்க் முடியின் ஈரப்பதத்தை அதிகப்படுகிறது. இது முடி உதிர்வைக் குறைத்து, முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. வாரம் ஒருமுறை தயிரில் வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து முடிக்கு தடவி வரவும்.


- பொதுவாக முடி உதிர்வதற்கு முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு தான். முடியில் ஏற்படும் வறட்சியும் முடி உதிர்விற்கு மற்றொரு காரணம். இந்த பிரச்சனையை சரி செய்ய தயிர் மற்றும் முட்டையால் செய்யக்கூடிய ஹேர் மாஸ்க்கை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிரில் முட்டை மற்றும் தேங்காய் எண்ணெய் கலந்து முடிக்கு தடவவும். இந்த ஹேர் மாஸ்க் நன்கு காய்ந்த பின்பு தண்ணீரில் கழுவவும். தற்போது முடி மிகவும் மென்மையாக மாறும்.


- உங்களுக்கு பொடுகு பிரச்சனை அதிகம் இருந்தால் தயிருடன் எலுமிச்சை சேர்த்து முடிக்கு தடவி வந்தால் இந்த பிரச்சனை நீங்கும். இந்த தயிர் மற்றும் எலுமிச்சை கலவை முடிக்கு அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆன்டிபாக்டீரியலாக செயல்படுகிறது. இது பொடுகை நீக்கி, அரிப்புகளை குறைக்கவும் உதவுகிறது.


(பொறுப்பு துறப்பு: அன்புள்ள வாசகரே, எங்கள் செய்திகளைப் படித்ததற்கு நன்றி. இந்தச் செய்தி உங்களுக்கு பல தகவல்களை வழங்குவதற்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதை எழுதுவதில் வீட்டு வைத்தியம் மற்றும் பொதுவான தகவல்களின் உதவியை நாங்கள் பெற்றுள்ளோம். இவற்றை பின்பற்றுவதற்கு முன் கண்டிப்பாக மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும். ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | Garlic Benefits: தினசரி பூண்டு சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா? தெரியாம போச்சே


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ