Lifestyle News In Tamil: நம் வாழ்க்கைமுறையில் உணவு பழக்கவழக்கம் என்பது மிகவும் முக்கியமானது. உங்களுக்கு அன்றாட வேலைக்கு தேவையான சக்தியையும், திறனையும் உடலுக்கு அளிப்பது என்பது உணவுதான். எனவே உணவின் மீது எப்போதும் அதிகம் கவனம் செலுத்த வேண்டும். அந்த வகையில், சாப்பிடும் போது உணவை நன்றாக மென்று தின்பது அவசியமாகும்.
உணவை நன்றாக மென்று சாப்பிடுவது இயல்பானதாக இருக்க வேண்டும், இது உங்களின் செரிமானத்திற்கு மிகவும் நல்லது. அதாவது உணவுகளை சிறிது சிறிதாக தொண்டையில் எளிமையாக முழுவதற்கும், செரிமானத்தை எளிதாக்குவதற்காகவும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். இது எப்போதும் வீட்டில் உள்ள மூத்தோரால் பரிந்துரைக்கப்படுவதுதான்.
அதாவது நீங்கள் சாப்பிடுகிறீர்கள் என்றால் உணவை நன்றாக மென்று, அந்த உணவு கூழாகும் வரை பொறுமை காக்கவும். அந்த உணவு உமிழ்நீருடன் நன்றாக கலந்து உடன்தான் முழுங்க வேண்டும் என்பதை பலரும் சொல்லியிருப்பார்கள், அதுவும் சாப்பிடும்போது வாயை திறக்காமல் மூடிக்கொண்டே மெல்லுவதுதான் கூடுதல் பலனை அளிக்கும் என்பார்கள். அந்த வகையில், சாப்பிடும் போது 32 முறை மெல்ல வேண்டும் என்பது பொதுவான நம்பிக்கைகளில் ஒன்றாகும். அந்த வகையில் இது அறிவியல்பூர்வமானதுதானா அல்லது மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுவதுதானா என்பது உறுதியாக தெரியாது.
மேலும் படிக்க | சமையலில் கலக்கும் மாதம்பட்டி ரங்கராஜின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
பொறுமையாக நிதானமாக மெல்லமாக சாப்பிட வேண்டும் என்பது முக்கியமானது. ஆனால் சாப்பிடும்போது 32 முறை உணவுகளை மெல்ல வேண்டும் என்பது ஒரு பழக்கத்திற்கு பின்பற்றப்பட்டுள்ளது. இது உங்கள் வயிறு நிறைந்துவிட்டதையும், அதிகமாக சாப்பிடுவதையும் தவிர்க்க மூளை சரியான சமிக்ஞைகளை அனுப்ப உதவும்.
இந்த முறை பழங்கலாத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வரும் பழக்கமாகும் என்றும் 32 முறை மெல்வது என்பது செரிமானத்திற்கு நல்லதுதான் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர். இருந்தாலும் 32 முறை மென்று சாப்பிட வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் வகையிலான அறிவியல்பூர்வமான ஆய்வுகள் ஏதும் இதுவரை இல்லை. இருந்தாலும் உணவுகளை நன்றாக மென்று தின்பது சுவையை அதிகரிக்கும், கார்போஹைரேட்டை எளிதாக செரிமானம் செய்யும். இந்நிலையில் நன்றாக உணவை மென்று சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் சிலவற்றை இங்கு காணலாம்.
உணவுகளை நன்றாக மென்று சாப்பிடும்போது, அதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதனால் வைட்டமிண்களும், கனிமங்களும் உடலுக்கு தேவையான அளவில் கிடைக்கும். மெதுவாக சாப்பிடுவதன் மூலம் வயிறு நிறையும், இதனால் நீங்கள் அதிக உணவுகளை சாப்பிட மாட்டீர்கள், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும். எனவே உணவை நன்றாக மென்று சாப்பிடுவதை எப்போதும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். மேலும் 32 முறை மெல்ல வேண்டும் என்ற எந்த விதியும் இல்லை, இருப்பினும் பழக்கத்திற்காக கூட நீங்கள் அதனை பின்பற்றலாம். மேலும் இதுகுறித்து மருத்துவ ஆலோசனை பெறுவதும் நன்றாகும்.
(பொறுப்பு துறப்பு: இந்த தகவல்கள் அனைத்தும் பொதுவான தகவல்களை அடிப்படையாக கொண்டது. இதனை பின்பற்றும் முன் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. இதற்கு Zee News பொறுப்பேற்காது)
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ