2024 மக்களவை தேர்தல் தற்போது தொடங்க உள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது.  முதற்கட்டமாக அருணாச்சல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்காளம், அந்தமான், நிக்கோபார் தீவுகள், ஜம்மு-காஷ்மீர், லட்சத்தீவு மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், பலரும் தங்கள் சொந்த ஊர்களுக்கு கிளம்பி வருகின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்


ஆனால் பலரும் வேலை காரணமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். வேலைக்காக அவர்களது தொகுதியிலிருந்து விலகி வாழும் சூழ்நிலையில் ஒரு நாள் விடுமுறையில் சொந்த ஊர்களுக்கு சென்று வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர். இருப்பினும், வேறொரு நகரத்தில் வசித்தாலும் உங்கள் வாக்கை எப்படி செலுத்தாலும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.  


வாக்காளர் பதிவு நிலை


வாக்களிக்க தகுதியான முதல் நிலை உங்களது பெயர் பதிவு செய்யப்பட்ட வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்ளுங்கள். இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாகவோ அல்லது உள்ளூர் தேர்தல் அதிகாரியைத் தொடர்பு கொள்வதன் மூலமாகவோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ சரிபார்க்கலாம்.


இடமாற்றத்திற்கு விண்ணப்பிக்கவும்


நீங்கள் வேலை காரணமாக வேறு நகரத்திற்கு மாறியிருந்தால், நீங்கள் வசிக்கும் பகுதியில் வாக்குகளை பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் முகவரி மாற்றத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்தப் படிவத்தை ஆன்லைன் அல்லது அருகில் உள்ள வாக்காளர் பதிவு மையத்தில் பெற்று கொள்ளலாம். இந்த படிவத்தை விண்ணப்பித்து, அதனுடன் நீங்கள் தற்போது வசிக்கும் இருப்பிட சான்றை சமர்ப்பிக்க வேண்டும். வாடகை ஒப்பந்தம், பில்கள் அல்லது குடியிருப்பு சான்றிதழ், கேஸ் பில் போன்ற ஆவணங்கள் வசிப்பிட சான்றாக ஏற்றுக்கொள்ளப்படும். 


சரிபார்ப்பு


மேலே குறிப்பிட்ட தேவையான ஆவணங்களை சமர்ப்பித்தவுடன், தேர்தல் அதிகாரிகள் உங்களது விண்ணப்பத்தை சரிபார்க்க தொடங்குவார்கள். விவரங்களைச் சரிபார்க்க, உங்கள் வீட்டிற்கும் வந்தும் சோதனை செய்யலாம். இந்த சரிபார்ப்புகள் முடிந்த பிறகு, உங்கள் வாக்காளர் அடையாள அட்டை புதிய தொகுதிக்கு மாற்றப்படும். இதனை நீங்கள் அஞ்சல் மூலமாகவோ அல்லது இணையதளம் மூலமாகவோ உறுதிப்படுத்தி கொள்ளலாம். 


எப்படி வாக்கு செலுத்துவது?


தேர்தல் நாள் அன்று உங்கள் பகுதியில் உள்ள வாக்கு செலுத்தும் இடத்திற்கு சென்று உங்களின் புதுப்பிக்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டையை மூலம் நீங்கள் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களிக்கவும். உங்கள் வாக்கு, உங்கள் தற்போதைய இருப்பிடத்தைப் பொருட்படுத்தாமல், ஜனநாயக செயல்முறையை வடிவமைப்பதற்கும் தேசத்தின் எதிர்காலத்தைத் தீர்மானிப்பதற்கும் பங்களிக்கிறது.


மேலும் படிக்க | எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸி


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ