உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

Voter ID Card Process: உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டையை இல்லையா அல்லது உங்கள் வாக்காளர் அடையாள அட்டையை இன்னும் வரவில்லையா? அப்படியானால் உடனே இந்த செய்தியை படியுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Apr 18, 2024, 08:40 AM IST
  • வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று விண்ணபிக்க வேண்டும்.
  • வோட்டர் ஐடி இல்லாமல் கூட வாக்களிக்கலாம்.
  • வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள் title=

Voter ID Card Process: கடந்த மாதம் இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், தேர்தல் ஆணையர்களான ஞானேஷ் குமார், சுக்வீர் சிங் சந்து ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்து மக்களவை தேர்தலுக்கான அட்டவணையை வெளியிட்டனர். அந்தவகையில் இந்த மக்களவை தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டில் நாளை அதாவது ஏப்ரல் 19 ஆம் தேதி தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. நாடு முழுவதும் 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இந்த 26 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் மக்களவை தேர்தலுடன் வாக்குப்பதிவு நடைபெறும்.

இந்நிலையில் தற்போது லோக்சபா தேர்தல் (Lok Sabha) தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து, நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதன்படி இந்த தேர்தலில் வாக்குபதிவு செய்ய வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்று இருக்க வேண்டும். அந்த வகையில் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் வாக்காளர் அடையாள அட்டை மூலம் தங்களின் வாக்குகளை பதிவிட முடியும். இந்த அட்டை நாட்டின் குடியுரிமையின் அடையாளமாகவும் அறியப்படுகிறது.

மக்களவை முதல்கட்ட தேர்தல் நாளை எந்தெந்த மாநிலங்களுக்கு?
அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தமிழ்நாடு மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களில் நாளை மக்களவை தேர்தல் நடைபெறவுள்ளது. 

மேலும் படிக்க | ஒவ்வொரு வங்கியிலும் எவ்வளவு மினிமம் பேலன்ஸ் வைத்திருக்க வேண்டும்?

இதனிடையே நாளை தேர்தல் நடைபெறயுள்ள நிலையில் வாக்காளர் அடையாள அட்டை தொடர்பான சில முக்கியமான விதிகளைப் பற்றி இப்போது தெரிந்து கொள்வோம்.

வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் தேர்தலில் வாக்களிக்க முடியுமா?
உங்கள் வாக்காளர் அடையாள அட்டை தொலைந்துவிட்டாலோ அல்லது வாக்காளர் அடையாள அட்டை இல்லாமல் இருந்தாலோ நீங்கள் தேர்தலில் வாக்களிக்க முடியும். ஆனால் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் கட்டாயம் இடம்பெற்றிருக்க வேண்டும்.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால், வோட்டர் ஐடி இல்லாமல் கூட வாக்களிக்கலாம். மேலும் தேர்தலில் வாக்களிக்க வேறு எந்த அடையாளச் சான்றினையும் கூட பயன்படுத்தலாம். ஆதார் அட்டை, இன்சூரன்ஸ் ஸ்மார்ட் கார்டு, பான் கார்டு, எம்என்ஆர்இஜிஏ ஜாப் கார்டு, ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் போன்றவற்றைக் காட்டி தேர்தலில் நீங்கள் வாக்களிக்கலாம்.

யார் யார் வாக்களிக்க முடியாது?
உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால், நீங்கள் வாக்களிக்க முடியும். ஆனால் உங்கள் பெயர் வாக்குப் பட்டியலில் இல்லை என்றால் உங்களால் வாக்களிக்க முடியாது.

இதனிடையே நீங்கள் ஆன்லைனில் மற்றும் ஆஃப்லைனில் முறையில் உங்கள் பெயரை வாக்குப் பட்டியலில் சேர்க்க முடியும். ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க, இந்திய தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://hindi.eci.gov.in/ல் இருந்து விண்ணப்பிக்க வேண்டும். இது தவிர, ஆஃப்லைன் முறையிலும் உங்கள் பெயரை வாக்குப் பட்டியலில் சேர்க்கலாம். இதற்காக அருகில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று விண்ணபிக்க வேண்டும்.

மக்களவை தொகுதிகள் எண்ணிக்கை:
அருணாச்சல பிரதேசம் (2)
அசாம் (5)
பீகார் (4)
சத்தீஸ்கர் (1)
மத்திய பிரதேசம் (6)
மகாராஷ்டிரா (5)
மணிப்பூர் (2)
மேகலா (2)
மிசோரம் (1)
நாகாலாந்து (1)
ராஜஸ்தான் (12)
சிக்கிம் (1)
தமிழ்நாடு (39)
திரிபுரா (1)
உத்தரப் பிரதேசம் (8)
உத்தரகாண்ட் (5)
மேற்கு வங்கம் (3)
அந்தமான் நிக்கோபார் தீவுகள் (1)
ஜம்மு மற்றும் காஷ்மீர் (1)
லட்சத்தீவு (1)
புதுச்சேரி (1)

மேலும் படிக்க | Bank Holidays: இன்று வங்கி விடுமுறையா? ஏப்ரலில் இன்னும் எத்தனை நாட்களுக்கு லீவு?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News