எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸி

How To Identify Your Polling Booth: மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை (ஏப். 19) நடைபெற உள்ள நிலையில், நீங்கள் வாக்குச் செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை கண்டுபிடிக்க இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றவும்.

Written by - Sudharsan G | Last Updated : Apr 18, 2024, 11:35 AM IST
  • தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
  • விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலும் நாளை நடைபெறுகிறது.
  • தமிழ்நாட்டின் அனைத்து ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
எங்கே ஓட்டு போடணும்னு தெரியலையா... வாக்குச்சாவடியை இப்படி கண்டுபிடிக்கலாம் - ரொம்ப ஈஸி title=

How To Identify Your Polling Booth: 18ஆவது மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பையும், அட்டவணையையும் கடந்த மார்ச் 16ஆம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறை அன்று முதல் அமலுக்கு வந்தது. தேர்தல் நடத்தை விதிமுறை என்பதன் மூலம் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் ரொக்கத்தொகை எடுத்துச்சென்றால் போதிய ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும், கட்சி கொடிக்கம்பங்கள் பொது இடங்களில் பறக்கக் கூடாது, அரசியல் தலைவர்களின் சிலை மற்றும் புகைப்படங்கள் பொது இடத்தில் இருந்தால் அவை மறைக்கப்படும்.

மொத்தம் நாடு முழுவதும் 543 மக்களவை தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளில் தற்போது தேர்தல் நடைபெறுகிறது. தொடர்ந்து, ஆந்திரா, ஒடிசா, அருணாச்சல பிரதேசம், சிக்கிம் என நான்கு மாநில சட்டப்பேரவை தேர்தல்களும், வெவ்வேறு மாநிலங்களின் 26 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலும் இந்த காலகட்டத்தில் நடைபெறுகிறது. இந்த அனைத்து தேர்தல்களும் மொத்தம் 7 கட்டங்களாக நடைபெறுகிறது.

7 கட்டங்களாக வாக்குப்பதிவு

ஏப். 19ஆம் தேதியான நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தொடர்ந்து ஏப்.26, மே 7, மே 13, மே 20, மே 25, ஜூன் 1 ஆகிய நாள்களில் முறையே இரண்டாம் முதல் ஏழாம் கட்ட வாக்குப்பதிவுகள் நடைபெறும். ஜூன் 4ஆம் தேதி தேர்தல்  முடிவுகள் தெரியவரும். முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற இருப்பதால், தேர்தல் நடக்கும் பகுதிகளில் பிரச்சாரங்கள் நேற்றோடு நிறைவுபெற்றது.  

மேலும் படிக்க | உங்களிடம் வோட்டர் ஐடி இல்லையா? அப்போ வாக்களிப்பது எப்படி? உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்

ஏப்.19 எங்கெல்லாம் வாக்குப்பதிவு...

அருணாச்சல பிரதேசேம், அசாம், பீகார், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, ராஜஸ்தான், சிக்கிம், தமிழ்நாடு, திரிபுரா, உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், மேற்கு வங்கம், அந்தமாண் மற்றும் நிகோபார் தீவுகள், ஜம்மு காஷ்மீர், லட்சத்தீவு, புதுச்சேரி ஆகிய 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தின் 102 தொகுதிகளில் தேர்தல் வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 

வாக்களிக்க தயாராகும் தமிழ்நாடு

இதில் குறிப்பாக தமிழ்நாட்டின் 39 மக்களவை தொகுதிகளும், புதுச்சேரியின் மக்களவை தொகுதிக்கும் நாளை (ஏப். 19) தேர்தல் நடைபெறும் வேளையில், கன்னியாகுமரியின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதியிலும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தபால் வாக்குகளை இன்று வரை செலுத்தலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 85 வயதுக்கு மேலானோர் தபால் வாக்கு மூலம் வாக்களிக்க, வீட்டுக்கே சென்று அதிகாரிகள் வாக்குகளை பதிவுசெய்துவிட்டு வருகின்றனர், அந்த பணியும் இன்றோடு முடிவடைகிறது.

இது ஒருபுறம் இருக்க மக்களும் தங்கள் தொகுதிக்கான மக்களவை பிரதிநிதியை தேர்ந்தெடுக்கும் ஆர்வத்தில் உள்ளனர். நாளை பொதுவிடுமுறை என்பதால் மக்கள் அதிகளவில் வாக்குச் செலுத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் 72.44% வாக்குகள் பதிவாகின. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் 73.63% வாக்குகள் பதிவாகின. எனவே இம்முறை இவற்றைவிட அதிக வாக்குகள் பதிவாகலாம். 

மேலும் படிக்க | தமிழ்நாடு மக்களவைத் தேர்தல் 2024 முழு வேட்பாளர் பட்டியல்.. எந்த தொகுதியில் யார் போட்டி?

EPIC நம்பரை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்

மக்கள் தங்கள் தொகுதியில் வேட்பாளர்களாக யார் யார் நிற்கிறார்கள், அவர்களின் சின்னம் என்ன, அவர்களின் எந்த வாக்கு இயந்திரத்தில் இடம்பெற்றுள்ளது என்பதை தேர்தல் ஆணையத்தின் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம்.  அதுமட்டுமின்றி, நீங்கள் உங்கள் தொகுதியில் எந்த வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்த வேண்டும் என்பதையும் நீங்கள் பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி தெரிந்துகொள்ளலாம். 

முதலில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையின் முன்பகுதியில் இருக்கும் EPIC நம்பரை கண்டுபிடிக்கவும். EPIC நம்பர் மூலம்தான் நீங்கள் எந்த வாக்குச்சாவடியில் வாக்குச் செலுத்த வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள முடியும். ஒருவேளை உங்களிடம் கார்டு இல்லையென்றால், NVSP இணையதளம் மூளமும் தெரிந்துகொள்ளலாம். அதற்காக, முதலில் NVSP அதிகார்பூர்வ இணையதளத்திற்கு சென்று, அங்கு Services என்பதன் கீழ் இருக்கும், Search in Electoral Roll என்பதை கிளிக் செய்யவும். 

அதில் Search by Details அல்லது Search by Mobile ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்யவும். Search by Details என்றால் கேட்கப்படும் அனைத்து விவரங்களையும் கொடுத்துவிட்டு Captcha Code உள்ளீடு செய்து, Search பட்டனை தட்டினால், EPIC நம்பர் வந்துவடும். Search by Mobile என்றால் உங்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் நம்பரை கொடுத்து Captcha Code கொடுத்து, Send OTP பட்டனை கிளிக் செய்யவும். உங்கள் எண்ணுக்கு வரும் OTP-ஐ கொடுத்து, உங்களின் EPIC நம்பரை தெரிந்துகொள்ளலாம். 

EPIC நம்பர் மூலம் வாக்குச்சாவடியை கண்டுபிடிக்கும் வழிமுறைகள்

- தேர்தல் ஆணையத்தின் இந்த அதிகாரப்பூர்வ இணையதளப்பக்கத்திற்கு செல்லவும். 

- அதில் EPIC நம்பர், மாநிலம், Captcha Code கொடுத்து Search பட்டனை கிளிக் செய்யவும்.

- உடனே உங்களின் வாக்குச்சாவடி குறித்த தகவல்கள் திரையில் தோன்றும். 

மேலும் படிக்க | தமிழ்நாட்டில் எத்தனை நாடாளுமன்றத் தொகுதிகள் உள்ளன? அதன் முழு பட்டியல் காண்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News