ஒரு சண்டை அல்லது விவாதம் முடிந்து பல நாட்கள் கழித்து அது குறித்து யோசிடித்து கொண்டிருக்கும் போது “ச்சே..இந்த பாய்ண்ட் அப்போ தாேணாம போயிருச்சே..அப்போ தெரிஞ்சிருந்தா இன்னும் நல்லா கேட்டிருக்கலாமே..” என்று யோசிப்போம். இப்படி, அவ்வப்போது நடக்கும் சண்டைக்கும் விவாதத்தையும் வெல்வதற்கு நம் கையில் ஏராளமான டிப்ஸ் இருக்கிறது. அவை என்னென்ன தெரியுமா? 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சாக்ரடிக் முறை:


இந்த முறையில், நீங்கள் விவாதிக்கும் நபரிடம் தொடர்ச்சியாக கேள்வி கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அவர்கள் கூறும் பதில்கள் இறுதியில் ஒரு முடிவுக்கு வரும். இதனால், நீங்கள் கேள்வி கேட்பதுடன் நிறுத்திக்கொள்வீர்கள். பதிலும், விவாதத்திற்கான முடிவும் எதிரில் இருக்கும் நபரின் வாயில் இருந்தே வந்துவிடும். 


உதாரணத்திற்கு ஒருவர், “எனக்கு யார் மீதும் நம்பிக்கை இல்லை” என்று பேசினால், நீங்கள் “பின்னர் ஏன் ஒரு ஓட்டுநரை நம்பி பஸ்ஸில் ஏறுகிறாய்? பிறரை நம்பி யாரும் இடிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில் ரோட்டில் செல்கிறாய்..?” என்பது போன்ற விவாதங்களை முன்வைக்க வேண்டும். 


தவறான தேர்வு:


இந்த முறையில், நாம் கொஞ்சம் அதிகமாகவே மூளையை உபயோகிக்க வேண்டி இருக்கிறது. இதில், நீங்கள் விவாதிக்கும் நபரிடம் நீங்கள் விவாதிக்கும் பிரச்சனைக்கு இரண்டு வழி மட்டுமே இருப்பது போல பேச வேண்டும். ஆனால், உண்மையில் அந்த பிரச்சனைக்கு பல்வேறு வழிகள் இருக்கலாம். எனவே, அவர்கள் உங்களுக்கு சாத்தியமான இரு முடிவுகளில் எந்த முடிவை எடுத்தாலும் அது உங்களுக்கு சாதகமாகவே அமையும். 


உதாரணத்திற்கு, “ஒன்று இதில் நீ என்னுடன் இருக்க வேண்டும் அல்லது எனக்கு எதிராக இருக்க வேண்டும்” என்று கூறினால், அவர்கள் இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பர். அது இரண்டுமே உங்களுக்கு எற்ற முடிவாக அமையும். 


உணர்வு முறை விவாதம்:


மனிதர்கள் அனைவருமே மிகவும் சாதாரணமான உயிரினங்கள். அவர்களுக்கு இருக்கும் உணர்வுகளும் ஒன்று போலத்தான் இருக்கும். ஒரு சிலர், சண்டையில் விவாதிக்கும் போது இடையிலேயே அழுவது, அல்லது அவர்களின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது போன்ற விஷயங்களை செய்வர். அது போல நீங்களும் செய்தால், எதிரில் இருக்கும் நபர் உங்கள் உணர்வுகளுக்கு அடிபணிவார். இறுதியில் லாஜிக் பார்ப்பதை விட்டு விட்டு உங்களுக்கு என்ன பதில் வேண்டுமோ அதைத்தான் இறுதியில் கூறுவார். 


மேலும் படிக்க | காதலர்களுக்கு ஜாக்பாட்! டேட்டிங் செய்ய தனி ரூம் - குழந்தை பெற 20 மில்லியன் காசு


சிவப்பு ஹெர்ரிங்:


விவாதங்களை அல்லது சண்டைகளை வெல்ல பலர் பயன்படுத்தும் மற்றொரு பொதுவான முறை, வாதிடும்போது முக்கிய பிரச்சனையில் கவனம் செலுத்துவதற்குப் பதிலாக சம்பந்தமே இல்லாத சிக்கல்களை பற்றி பேசுவது. இது விவாதிக்கும் நபரை முக்கிய பிரச்சனையில் இருந்து விலக்கி, திசை மாற்றும். 


உதாரணத்திற்கு:


ஒருவர் உங்களிடம், நீங்கள் அதிகமாக செலவு செய்வதாக கூறி சண்டையிட்டால், “நமக்கு பிறகு இங்கு யார் இருக்க போகிறார்கள்? இனி எத்தனை முறை பிறக்க போகிறோம்..” என்று தத்துவம் பேசி எஸ்கேப் ஆகிவிட வேண்டும். 


அமைதியான முறை:


அமைதியாக இருப்பதற்கு, பவர் அதிகமாக இருக்கிறது. ஒருவர் உங்களிடம் விவாதிக்கும் போது அமைதியாக அவரையே உற்று பாருங்கள். அப்போது, அவருக்கே சங்கடமாக உணரும். இது, அவர்களை விவாதத்தில் பலவீனமானவர்களாக மாற்றும்.


மேலும் படிக்க | நீங்கள் காதலித்த நபர் வேறு ஒருவரை காதலித்தால் என்ன செய்வது? மூவ் ஆன் ஆக 7 டிப்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ