நீங்கள் காதலித்த நபர் வேறு ஒருவரை காதலித்தால் என்ன செய்வது? மூவ் ஆன் ஆக 7 டிப்ஸ்!

How To Move On From One Sided Love : நம்மில் பலருக்கு, ஒருவரை மிகவும் பிடித்திருக்கும். ஆனால், அந்த நபருக்கு நம் மீது காதல் அல்லது நட்பு போன்ற எந்த உணர்வு இருக்காது. இது போன்ற சூழ்நிலைகளை கடந்து போவது எப்படி? இதோ டிப்ஸ்!

How To Move On From One Sided Love : காதல் என்பது உலகளவில் பொதுமையாக இருக்கும், அனைவருக்கும் புரியும் மொழிகளுள் ஒன்றாகும். ஆனால் இது அனைவருக்கும் கிடைப்பதில்லை, கிடைத்தவர்கள் பெரும்பாலும் தக்க வைத்து கொள்வதும் இல்லை. இருவர் காதலித்து இருவரும் சேர்ந்து முடிவெடுத்து பிரேக்-அப் செய்வது கொடுமை என்றால், அதை விட கொடுமை ஒன் சைட் காதலில் இருந்து மூவ் ஆன் ஆவது. ஒரு சிலர், ஒருவரை பிடித்திருக்கிறது என்றால், அவரிடம் தன் காதலை கூறியிருப்பர், கூறாமலும் இருந்திருப்பர். ஆனால், அந்த நபர் இவர்களை வேண்டாம் என்று சொல்லிவிட்டு வேறு ஒருவரை காதலன்/காதலி ஆக்கி கொள்ளலாம். அப்படிப்பட்ட சூழலில், ஒருதலையாக காதலித்த நபருக்கு மனம் நொறுங்கிப்போவது போல இருக்கும். எப்படி இதிலிருந்து மீள்வது என சிலர் வழி தெரியாமல் சுற்றிக்கொண்டிருப்பர். அவர்களுக்கான டிப்ஸ், இதோ. 

1 /8

நீங்கள் காதலித்த நபர், உங்களை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிக்கும் போது மனம் நொறுங்கி போகத்தான் செய்யும். இந்த சூழலில் சிக்கி தவிப்பவர்கள், இதிலிருந்து மூவ்-ஆன் ஆக என்ன செய்ய வேண்டும்? இதோ டிப்ஸ்!

2 /8

உணர்வுகளை ஏற்றுக்கொள்ளுதல்: கோபம், அழுகை, சோகம் உள்ளிட்ட பல உணர்வுகள் உங்களை ஒரே சமயத்தில் இது போன்ற சூழல்களில் தக்கலாம். இதை உணராமல் உங்களை நீங்களே ஏமாற்றி கொள்வதை விட்டுவிட்டு, அந்த உணர்வுகளை “ஆம், நான் இப்படிதான் உணர்கிறேன்” என்று ஏற்றுக்கொள்ளுங்கள். 

3 /8

உங்களுக்கான நேரம்.. நீங்கள் காதலித்த நபர் வேறு ஒருவரை காதலிக்கிறார் என்பது தெரிய வரும் போது, முதலில் அந்த சூழலை புரிந்து  கொள்ள உங்களுக்கு நீங்களே நேரம் ஒதுக்கி கொள்ளுங்கள். 

4 /8

உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுதல்: உங்கள் மனதை நிம்மதியடைய செய்யும், சாந்தப்படுத்தும், உங்களுக்கு பிடித்த விஷயங்களை செய்ய தொடங்குங்கள். புதிதான ஒரு திறனை கற்றுக்கொள்வது, புதிதாக ஏதேனும் ஒரு விஷயத்தை தொடங்குவது நல்ல திருப்புமுனையை ஏற்படுத்தும். 

5 /8

ஆதரவு.. உங்கள் குடும்பத்தில் அல்லது நண்பர்கள் குழுவில் யாரேனும் ஒருவராவது நீங்கள் கூறும் வார்த்தைகளை காதுகொடுத்து கேட்பார். எனவே, ஆதரவு தேவைப்படும் போது அதை கேட்பதில் தவறில்லை. 

6 /8

உங்கள் தேவைகள்: நீங்கள் காதலித்த நபர், அல்லது காதலிப்பதாக நினைத்த நபர் உண்மையிலேயே உங்கள் வாழ்க்கைக்கு சரியானவர்தானா? என்று ஒரு நிமிடம் அவர் உங்களை நடத்திய விதங்களை வைத்து எடை போட்டு பாருங்கள். 

7 /8

ஆற்றல்: இந்த நேரத்தை உங்களது சுய தைரியத்தை வளர்த்துக்கொள்ளவும், மகிழ்ச்சியை பெருக்கி கொள்ளவும் பயன்படுத்துங்கள். இது, உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கு பின் ஓடுவதாக இருக்கலாம், அல்லது உங்கள் மீது ஏற்கனவே அன்பு கொண்டிருக்கும் உங்களை சுற்றி இருப்பவர்கள் மீது அன்பு கொள்வதாக இருக்கலாம். எனவே, உங்கள் வாழ்வில் ஏற்கனவே உங்களுக்கு அளவுக்கு அதிகமாக கிடைத்திருக்கும் அன்பை பாராட்ட கற்றுக்கொள்ளுங்கள். 

8 /8

புதிய தொடக்கத்திற்கு தயாராக இருங்கள்: “ஒரு குளத்தில் ஒரு மீன்தான் இருக்கிறதா என்ன?” என்று சிலர் கேட்பர். இது மீனுக்கு மட்டுமல்ல, அனைத்து விஷயங்களுக்கும் தான். எனவே, உங்கள் மனதையும் அறிவையும் திறந்து வைத்து அடுத்து உங்களுக்கு பிடித்த நபரிடம் பேசும் போது, தெளிவாக பேசுங்கள். உங்களுக்கு ஏற்ற சரியான நபர் அவறாகவே வந்து உங்கள் முன் நிற்கலாம். அதுவரை, தினமும் “இதுவும் கடந்து போகும்” என உங்களுக்குள் நீங்களே சொல்லி