2019-ஆம் ஆண்டின் இறுதியில் ஹவாயின் துணை நிறுவனமான ஹானர் நிறுவனம், முதல் 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

2019-ஆம் நான்காம் காலாண்டில் தங்கள் நிறுவனத்தின் முதல் 5G ஸ்மார்ட் போனை வெளியிட இருப்பதாக ஹானர் நிறுவனம் உறுதி செய்துள்ளது. ஷாங்காயில் நடைபெற்ற 2019 உலக மோபைல் காங்கிரஸ் மாநாட்டில், ஹானர் நிறுவனத்தின் தலைவரான ஜார்ஜ் ஜாய் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.


5G வசதியுடன் வெளியாகவுள்ள இந்த ஸ்மார்ட்போன், சிறந்த சிறப்பம்சங்களை கொண்டு வெளியாகும் என அந்நிறுவனம் தலைவர் ஜார்ஜ் ஜாய் தெரிவித்துள்ளார். 


மேலும், இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை 2020-ஆம் ஆண்டிற்குள் 100 மில்லியன் எண்ணிக்கையை தொடும் எனவும் ஜாய் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இத்தகவலை வெளியிட்ட ஜாய், இதன் விலை மற்றும் இந்த ஸ்மார்ட்போன் குறித்து எந்த தகவலையும் வெளியிடவில்லை. 


உலகின் இரண்டு பெரிய பொருளாதார நாடுகளுக்கு இடயே நடந்து வரும் வர்த்தகப் போரில் ஹவாய் சர்ச்சைகளின் மையமாக இருந்து வருகிறது. அமெரிக்கா ஆளும் ட்ரம்பின் நிர்வாகம் பிற நாட்டு பொருட்களுக்கு தங்கள் பிராந்தியத்தில் கடும் நெருக்கடி கொடுத்து வருகிறது, குறிப்பாக வரவிருக்கும் சூப்பர்-ஃபாஸ்ட் 5G நெட்வொர்க்குகள், உலகளாவிய திட்டமான ஹவாய் ஒரு முக்கிய பங்கை வகிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருப்பினும், 5G வணிகத்தில் இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஹவாய் தெரிவிக்கின்றது.


மேலும், தற்போதைய 5G தொழில்நுட்ப தீர்வுகள் பொருளாதாரத் தடைகளால் முற்றிலும் பாதிக்கப்படவில்லை என்பதை இங்குள்ள அனைவருக்கும் நான் தெளிவாகக் கூற முடியும்" என்று ஹாங்காயின் துணைத் தலைவர் கென் ஹு ஷாங்காயில் நடந்த மொபைல் உலக காங்கிரசில் செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்.