ஜாக்கிரதை! பான், ஆதார் கார்டை வைத்து பலே மோசடி... பத்திரமாக வைத்திருக்க வழிகள் இதோ!
Aadhar And Pan Card: ஆன்லைன் மோசடிகள் அதிகமாகி வரும் சூழலில் பான், ஆதார் போன்ற அடையாள அட்டைகளின் தகவல்களும் பல இடங்களில் தவறாக பயன்படுத்தப்படுகிறது. அதில் இருந்து தப்பிப்பது எப்படி குறித்து இதில் காணலாம்.
Aadhar And Pan Card: பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு ஆகியவை இந்தியாவில் ஒரு தனிநபருக்கு இரண்டு முக்கிய ஆவணங்களாக உள்ளது. அதே நேரத்தில், டிஜிட்டல்மயக்கமாக்கல் மிகவும் வேகமடைந்துள்ளதால், இவை சார்ந்த ஆன்லைன் மோசடிகளும் வேகமாக அதிகரித்து வருகின்றன.
சமீபகாலமாக பல பிரபலங்களின் ஆவணங்களை தவறாக பயன்படுத்தியது குறித்த தகவல்களும் வெளிவந்தன. அத்தகைய சூழ்நிலையில், உங்கள் பான் கார்டு, ஆதார் கார்டை பாதுகாப்பாக வைத்திருக்க சில விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்
ஆதார், பான் தவறான பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி?
1) உங்கள் பான் மற்றும் ஆதாரை போகும் அனைத்து இடங்களுக்கும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும். அதற்கு பதிலாக, முடிந்தவரை, வாக்காளர் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற பிற அடையாள அட்டைகளை பயன்படுத்தவும்.
2) உங்களின் பான் மற்றும் ஆதார் விவரங்களை அதிகாரிகள் அல்லது நிறுவனங்களுடன் மட்டும் பகிர்ந்து கொள்ளவும், அதன் நகலில் தேதியுடன் கையெழுத்திடவும்.
மேலும் படிக்க | 8th Pay Commission பம்பர் அப்டேட்: விரைவில் நல்ல செய்தி, ஊதிய உயர்வு
3) சமூக ஊடகங்கள் உட்பட ஆன்லைன் தளங்களில் உங்கள் முழுப்பெயர் மற்றும் பிறந்த தேதியை உள்ளிடுவதைத் தவிர்க்கவும். உங்கள் பான் எண்ணைக் கண்காணிக்க இவற்றைப் பயன்படுத்தலாம்.
4) உங்கள் கடன் சார்ந்த அறிக்கையை தவறாமல் சரிபார்க்கவும்
5) உங்கள் தொலைபேசியின் கேலரியில் பான் மற்றும் ஆதாரை வைத்திருப்பதைத் தவிர்க்கவும், ஏனெனில் தொலைபேசி தொலைந்துவிட்டால் அவற்றை எளிதாக எடுத்துவிடலாம்.
மோசடியை எப்படி அறிந்துகொள்வது?
உங்கள் பான் கார்டு மோசடிக்கு பயன்படுத்தப்பட்டதா இல்லையா என்பதை அறிய, சிபில் (CIBIL) அறிக்கையைப் பார்க்கவும். அறிக்கையில் அனைத்து கடன்கள் மற்றும் கடன் அட்டைகள் சார்ந்த விவரங்கள் இருக்கும். நீங்கள் பெறாத கிரெடிட் கார்டு அல்லது கடன் விவரங்கள் சிபில் அறிக்கையில் தென்பட்டால், உடனடியாக அதிகாரிகளுக்குத் தெரிவிக்கவும்.
பான் எண்ணின் தவறான பயன்பாட்டை எவ்வாறு புகாரளிப்பது?
- TIN NSDL-இன் அதிகாரப்பூர்வ போர்ட்டலுக்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் வாடிக்கையாளர் பராமரிப்பு (Customer Care) பிரிவைக் கண்டறியவும், இது கீழ்காணும் மெனுவைத் திறக்கும்.
- கீழ்காணும் மெனுவில் இருந்து 'புகார்/கேள்விகள்' திறக்கவும். இப்போது ஒரு புகார் படிவம் திறக்கப்படும்.
- புகார் படிவத்தில் தேவையான விவரங்களை நிரப்பவும். கேப்ட்சா குறியீட்டை உள்ளிட்டு 'சமர்ப்பி' (Submit) என்பதைக் கிளிக் செய்யவும்.
மேலும் படிக்க | Old Pension Scheme அதிர்ச்சி செய்தி: அரசு அளித்த முக்கிய அப்டேட்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ