புதுடெல்லி: நாடெங்கிலும் உள்ள ரயில்வே ஊழியர்களுக்கு ஒரு நல்ல செய்தி காத்திருக்கிறது. சமீபத்தில் நடந்த அகவிலைப்படி அதிகரிப்பால், ஏற்கனவே ரயில்வே ஊழியர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கிடையில், ரயில்வே ஊழியர்கள் (Railway Employees) மீது மீண்டும் பண மழை பொழியப் போகிறது. நவராத்திரி சமயத்தில் ரவயில்வே ஊழியர்களின் பணப்பைகள் மீண்டும் நிரம்பவுள்ளன. 


நவராத்திரி சமயத்தில் ஊழியர்களுக்கு கிடைக்கும் போனஸ் பற்றிய பேச்சு எழத் தொடங்கியுள்ளது. இன்று போனஸ் பற்றிய அறிவிப்பு வரக்கூடும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டைப் போலவே, இந்த முறையும் 78 நாட்கள் போனஸாக ரூ .17951 ஊழியர்களின் கணக்கை சென்றடையும்.


ரயில்வே ஊழியர்கள் மீது பண மழை


ஊழியர்களுக்கு போனஸ் கிடைப்பதோடு, ஜூலை மாத அகவிலைப்படியும் (Dearness Allowance) அவர்களது ஊதியத்தில் சேர்க்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது, இப்போது வரும் ஊதியத்தில், போனஸ் மற்றும் அகவிலைப்படியின் தொகையும் சேர்ந்து வரும். ரயில்வே ஊழியர்கள் சமீபத்தில் 11 சதவிகிதம் அதிகரித்த அகவிலைப்படியின் பலனைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


ALSO READ: 7th Pay Commission: ஊழியர்களுக்கு கிடைக்குமா DA, DR அரியர் தொகை? அரசு கூறுவது என்ன?


கொரோனா தொற்று காரணமாக 2020 ஜனவரி முதல் ஊழியர்களின் அகவிலைப்படி தடை செய்யப்பட்டிருந்தது. சமீபத்தில், இந்த தடையை மத்திய அரசு (Central Government) நீக்கியுள்ளது. இதற்குப்பிறகு ஊழியர்களின் அகவிலைப்படி 17 சதவிகிதத்திலிருந்து 28 சதவீதமாக அதிகரித்துள்ளது. 


இப்போது ஜூலை 2021-ன் அகவிலைப்படி மூன்று சதவீதம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பிறகு, ஊழியர்களின் மொத்த அகவிலைப்படி 31 சதவீதமாக அதிகரிக்கும்.


அனைத்து ஊழியர்களுக்கு ரூ. 72,500 வெகுமதி கிடைக்கும்


பண்டிகை காலத்தை முன்னிட்டு பொதுத்துறை நிறுவனமான கோல் இந்தியா லிமிடெட். (Coal India Limited) 2020-21 நிதியாண்டில் அதன் அனைத்து நான்-அஃபிசியல் பணியாளர்களுக்கும் செயல்திறன் அடிப்படையிலான ஊக்கத்தொகையாக (PLR- Performance-linked reward) 72,500 ரூபாயை அறிவித்துள்ளது. பிஎல்ஆர் அக்டோபர் 11, 2021 அன்று அல்லது அதற்கு முன் செலுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. அதாவது, ஊழியர்களுக்கு விஜய தசமிக்கு முன்னர் இந்த வெகுமதி கிடைக்கும்.


Coal India-வின் பரிசு


'கோல் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான சிங்காரேனி கோலியரீஸ் கம்பெனி லிமிடெட் (Singareni Collieries Company Ltd- SCCL) 2020-21 நிதியாண்டில் நான்-அஃபிசியல் ஊழியர்களுக்கு ரூ.72,500 PLR வழங்கப்படும். மத்திய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் கோல் இந்தியா மற்றும் எஸ்சிசிஎல் நிர்வாகத்தின் இருதரப்பு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.' என்று நிறுவனம் கூறியுள்ளது.


ALSO READ: 7th Pay Commission: தீபாவளிக்கு முன் மீண்டும் அதிகரிக்கிறதா ஊதியம்? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR