புதுடெல்லி: மத்திய அரசு ஊழியர்களின் குடும்பங்களுக்கு அளிக்கப்படும் குடும்ப ஓய்வூதியத்தின் விதிகளை அரசு மாற்றியுள்ளது. இந்த ஓய்வூதியம், மத்திய அரசு ஊழியர்களின் இறப்புக்குப் பிறகு அவர்களது குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றது.
புதிய விதியின்படி, ஊழியர்களைச் சார்ந்திருப்பவர்கள் இப்போது மத்திய குடிமைப் பணியாளர் ஓய்வூதிய விதிகள் 1972 இன் கீழ் ரூ .1.25 லட்சம் மதிப்புள்ள இரண்டு குடும்ப ஓய்வூதியங்களைப் பெறுவதற்கு தகுதி பெறுகிறார்கள். முன்பு, குடும்ப ஓய்வூதியத்தின் உச்சவரம்பு ரூ .45,000 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
மத்திய அரசு (Central Government) தனது ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சமூக பாதுகாப்பை வழங்குகிறது. மத்திய சிவில் சர்வீசஸ் (Central Civil Services, 1972) இன் 54 வது விதியின் (11) துணை விதியின் கீழ், கணவன் மற்றும் மனைவி அரசு ஊழியர்களாக இருந்தால், அவர்களது குழந்தைகளுக்கு இரண்டு ஓய்வூதியங்களைப் பெற உரிமை உண்டு.
ALSO READ: 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு இரட்டை மகிழ்ச்சி, DA HRA முழு கணக்கீடு இதோ
இந்த நிலையில், குடும்ப ஓய்வூதியத்திலி இருந்த ரூ .45,000 என்ற வரம்பு, அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களிலிருந்து அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதில் தடையாக இருந்தது. ஆகையால் அரசாங்கம் இப்போது வரம்பை 1,25,000 ஆக உயர்த்தியுள்ளது.
மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் முன்னதாக, குடும்ப ஓய்வூதியம் தொடர்பான தொலைநோக்கு சீர்திருத்தத்தில், மேல் உச்சவரம்பு மாதத்திற்கு ரூ .45,000 லிருந்து ரூ .1.25 லட்சமாக உயர்த்தப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தார். பிப்ரவரி 2021 இல் மேல் உச்சவரம்பை ரூ. 45,000 லிருந்து ரூ .1,25,000 ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது.
7 வது ஊதியக் கமிஷனில் (7th Pay Commission) அதிகபட்ச ஊதியம் மாதத்திற்கு ரூ 2,50,000 ஆக உயர்த்தப்பட்டதை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன் விளைவாக, CCS (ஓய்வூதிய) விதிகளின் விதி 54 (11) இல் குறிப்பிடப்பட்டுள்ள விதிகளும் மாற்றப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கை மூலம் இறந்த ஊழியர்களின் குடும்ப உறுப்பினர்களின் வாழ்க்கை சுமை குறைக்கப்படும் என்றும் அவர்களுக்கு போதுமான நிதி பாதுகாப்பு கிடைக்கும் என்றும் கூறினார். ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலத்துறை (DoPPW), பெற்றோர் இறந்த பிறகு இரண்டு குடும்ப ஓய்வூதியம் (Pension) பெற தகுதி பெறும் குழந்தைகளுக்கான தொகை குறித்து தெளிவுபடுத்தியுள்ளது.
ALSO READ: 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களின் பணிக்கொடை ரூ.7 லட்சமாக உயர்கிறதா?
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR