7வது சம்பள கமிஷன், சமீபத்திய செய்திகள்: ஜூலை 2023 -இல் அகவிலைப்படி எவ்வளவு அதிகரிக்கும் என்ற கேள்வி மத்திய அரசு ஊழியர்களின் மனங்களில் நீண்ட நாட்களாக இருந்து வந்தது. அந்த காத்திருப்பு இப்போது முடிந்தது. மத்திய ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளம் விரைவில் வழங்கப்படும். ஜூலை 1, 2023 முதல், 46 சதவீத அகவிலைப்படி கிடைக்கும். எனினும், இதுவரை இதற்கான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. ஆனால், ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி அதிகரிப்பு அமல்படுத்தப்படும். சமீபத்தில் வந்த ஏஐசிபிஐ குறியீட்டின் புள்ளிவிவரங்கள் ஊழியர்களின் அகவிலைப்படியில் 4 சதவீதம் உயர்த்தப்படும் என்று தெளிவுபடுத்தியுள்ளன.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது


அகவிலைப்படி அடிப்படை சம்பளத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஒருவரின் சம்பளம் ரூ.20,000 என்றால், 4 சதவீதம் என்ற விகிதத்தில் அவரது மொத்த சம்பளம் ஒரு மாதத்தில் ரூ.800 அதிகரிக்கும்.


ஜூன் மாதத்தில் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவு செய்யப்பட்டது


ஜனவரி முதல் ஜூலை வரையிலான புள்ளிவிவரங்களின் அடிப்படையில், டிஏ உயர்வு 46 சதவீதம் என்ற விகிதத்தில் கிடைக்கும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை ஊழியர்களின் அகவிலைப்படி 42 சதவீதமாக இருந்தது, இனி இது 46 சதவீதமாக உயரும். ஜூன் 2023 இன் ஏஐசிபிஐ குறியீட்டில் பெரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. ஜூன் குறியீட்டு எண் 136.4 புள்ளிகளாக உயர்ந்துள்ளது. முன்னதாக மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 134.7 புள்ளிகளாக இருந்தது. அதாவது ஜூன் மாதத்தில் 1.7 புள்ளிகள் அதிகரிப்பு பதிவாகியுள்ளது. மே மாத புள்ளிவிவரங்களின்படி, டிஏ மதிப்பெண் 45.58 சதவீதமாக இருந்தது, இது ஜூன் 2023 இல் 46.24 சதவீதமாக அதிகரித்துள்ளது. அகவிலைப்படி உயர்வின் பலன், ஏழாவது ஊதியக் குழுவின் கீழ் சம்பளம் பெறும் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும். இந்த உயர்வின் பலன் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக வழங்கப்படும்.


மேலும் படிக்க | ஊழியர்களுக்கு டபுள் ஜாக்பாட்! 18 மாத டிஏ நிலுவைத் தொகை.. முக்கிய அப்டேட் இதோ


சம்பளம் எவ்வளவு அதிகரிக்கும், கணக்கைப் புரிந்து கொள்ளுங்கள்


7வது ஊதியக் குழுவின் படி, அதிகாரி தர ஊதியத்தில் (ஆஃபிசர் க்ரேட் சேலரி) பம்பர் உயர்வு இருக்கும். உதாரணமாக, ஒருவரின் அடிப்படை சம்பளம் தற்போது ரூ. 31550 என்று வைத்துக்கொள்வோம். அந்த நிலையில், அதன் அடிப்படையிலான கணக்கீடு இப்படி இருக்கும். 


- அடிப்படை சம்பளம் (BasicPay) - ரூ. 31,550
- புதிய அகவிலைப்படி (DA) – 46% – ரூ. 14,513 / மாதம்
- தற்போதைய அகவிலைப்படி (DA) – 42% – ரூ. 13,251 / மாதம்
- 4% அகவிலைப்படி (DA) உயர்வு - ரூ. 1,262 (மாதம்) அதிகமாக வரும்
- ஆண்டு அகவிலைப்படி - 4% அதிகரிப்பில் ரூ. 15,144 கூடுதலாக வழங்கப்படும்
- மொத்த வருடாந்திர அகவிலைப்படி - ரூ 1,74,156 (46 சதவீதம்)


டிஏ உயர்வு எப்போது அறிவிக்கப்படும்


ஜூலை 2023 -க்கான அகவிலைப்படி உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால், அதை அரசு அறிவிக்க இன்னும் கால அவகாசம் உள்ளது. அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு செப்டம்பர் மாதம் வெளிவரலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வழக்கமாக, அகவிலைப்படி செப்டம்பர் மாதத்திலேயே அமைச்சரவையால் அங்கீகரிக்கப்படும். இதற்குப் பிறகு நிதி அமைச்சகம் அதை அறிவித்து அதன் பிறகு அது மத்திய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது. அகவிலைப்படி உயர்வு பற்றிய அறிவிப்பு எப்போது வந்தாலும், ஜூலை 2023 முதலான அதிகரிப்பின் அரியர் தொகை மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படுகிறது.


மேலும் படிக்க | 7th Pay Commission சூப்பர் அப்டேட்: 46% அகவிலைப்படி.. இந்த நாளில் வரும் அறிவிப்பு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ