7வது ஊதியக் குழுவின் சமீபத்திய செய்திகள்: அரசு பெரிய அறிவிப்பை வெளியிடப் போவதால் மத்திய ஊழியர்களும், ஓய்வூதியர்களும் இப்போது டபுள் ஜாக்பாட் அடிக்கப் போகிறது. மத்திய மோடி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஒன்றல்ல இரண்டு பெரிய பரிசுகளை வழங்கப் போகிறது. அதன்படி உங்கள் குடும்பத்தைச் சேர்ந்த எவரும் மத்தியப் பணியாளராக இருந்தால், அவர்களுக்கு தற்போது மிகப்பெரிய செய்தி ஒன்றை மத்திய அரசு வழங்கப் போகிறது.
அந்த வகையில் ஊழியர்களுக்கு டிஏ (அகவிலைப்படி) நிலுவைத் தொகையை அனுப்புவதுடன், இந்த மாதம் மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயரும் வாய்ப்புகள் உள்ளன. இதன் காரணமாக அடிப்படை சம்பளத்தை உரிய முறையில் அதிகரிக்க முடியும் என கருதப்படுகிறது. அதாவது 42 சதவீதம் அகவிலைப்படி வாங்குபவர்கள் இனி 46 சதவீதம் வாங்குவார்கள். இதன் மூலம் 26 ஆயிரம் ரூபாய் அடிப்படை வருமானம் வாங்கும் நபர்களுக்கு 11,960 ரூபாய் வரை அகவிலைப்படி உயர்வு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க | இப்படியான 5 ரூபாய் உங்ககிட்ட இருக்கா? உடனே படியுங்க.. லட்சங்களை அள்ளித்தரும்
அகவிலைப்படியின் பாக்கி பணம் கணக்கில் எப்போது வந்து சேரும்
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் கணக்கில் சிக்கியுள்ள 18 மாத டிஏ நிலுவைத் தொகையை மத்திய மோடி அரசு விரைவில் மாற்றப் போகிறது என்று பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இது நடந்தால், ஊழியர்களின் கணக்கில் பெரும் தொகை வந்து சேரும் என்பது உறுதி. உண்மையில், ஜனவரி 1, 2020 முதல் ஜூன் 30, 2021 வரையிலான கொரோனா காலகட்டத்திற்கு 18 மாதங்களுக்கான டிஏ நிலுவைத் தொகையை மோடி அரசு இன்னும் அனுப்பவில்லை.
கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்பே இதற்கு காரணம் என அரசு கூறியுள்ளது. இதைத் தொடர்ந்து தொழிலாளி வர்க்கம் பாக்கி பணத்தை வழங்குமாறு கோரி விடுத்து வந்த நிலையில் தற்போது இதற்கு மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இது நடந்தால், உயர் பதவியில் உள்ள ஊழியர்களின் கணக்கில் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக பணம் வந்து சேரும். இருப்பினும் இது தொடர்பாக இன்னும் அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிக்கையை வழங்கவில்லை என்றாலும் ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.
அகவிலைப்படி கூடிய விரைவில் அதிகரிக்கப்படும்
இந்நிலையில் இன்னும் கூடிய விரைவில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை உயர்த்த உள்ளது. இந்த முறை அரசாங்கம் DA ஐ சுமார் 4 சதவீதம் அதிகரிக்கலாம், இதன் மூலம் ஊழியர்களின் சம்பளமும் கணிசமாக அதிகரிக்கும். அந்த வகையில் 42 சதவீதம் அகவிலைப்படி வாங்குபவர்கள் இனி 46 சதவீதம் வாங்குவார்கள்.
இதனிடையே தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
டிஏ கணக்கீடு பின்வருமாறு
உங்கள் அடிப்படை வருமானம் 29,200 ரூபாய் இருந்தால் ( பே மேட்ரிக்ஸ் நிலை 5). நீங்கள் சம்பாதிக்கும் டிஏ தொகை ரூ. 2264. இந்த டிஏ தொகைக்கு 18 மாத அரியரை கணக்கிட வேண்டும் என்றால், டிஏ தொகையை மாதங்களால் பெருக்க வேண்டும். 18 மாதங்கள் அரியர் என்றால் அதனால் பெருக்க வேண்டும். அதாவது டிஏ தொகை 18 மாத அரியரோடு 2,20,752 ரூபாயாக இருக்கும்.
மேலும் படிக்க | இரண்டு வங்கிகளில் கணக்கு உள்ளதா? இந்த விஷயங்களை கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ