8th Pay Commission விரைவில்: சுடச்சுட சூப்பர் செய்தி...ஊழியர்களுக்கு பம்பர் ஊதிய உயர்வு
8th Pay Commission: நீங்கள் ஒரு மத்திய அரசு ஊழியரா? 8வது ஊதியக் குழு பற்றிய ஒரு புதுப்பிப்பு தற்போது வந்துள்ளது.
8வது ஊதியக் குழுவின் சமீபத்திய புதுப்பிப்பு: நீங்கள் மத்திய ஊழியராக இருந்தாலோ அல்லது உங்கள் குடும்ப நபர்கள் யாரேனும் மத்திய அரசு ஊழியராக இருந்தாலோ, இந்தச் செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஆம், ஊழியர்களுக்கான ஒரு முக்கிய அப்டேட் தற்போது வந்துள்ளது. சமீப காலங்களில் மத்திய அரசு ஊழியர்கள் சில விஷயங்களுக்காக தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவது, 8 ஆவது ஊதியக் குழுவை அமைப்பது, 18 மாத நிலுவைத் தொகையை அளிப்பது என இவற்றை அரசு தங்களுக்காக செய்ய வேண்டும் என ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
8 ஆவது ஊதியக் குழு
இவற்றில் 8வது ஊதியக் குழு பற்றிய ஒரு புதுப்பிப்பு தற்போது வந்துள்ளது. 7 ஆவது ஊதியக் குழுவுக்குப் பிறகு மத்திய அரசு ஊழியர்களுக்காக எந்த ஆணையத்தையும் அமைக்காது என்ற செய்தி சமீபத்தில் பரவி வந்தது. ஆனால் தற்போது அரசின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஆம், ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு பரிசீலிக்கவுள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இது குறித்து எங்களது இணை இணையதளமான ஜீ பிசினஸ் வெளியிட்டுள்ள செய்தியில், மத்திய அரசு ஊழியர்களுக்கு நற்செய்தி வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கக்கூடும்
7 வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, 8 வது ஊதியக் குழு பற்றிய விவாதங்களும் பரிசீலனைகளும் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுமட்டுமின்றி, 8வது ஊதியக் குழுவின் கோப்பும் தயார் நிலையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் அடுத்த ஆண்டு மத்திய அரசு, ஊழியர்களுக்கு பெரிய அறிவிப்பை வெளியிடக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன், ஊழியர்களின் குறைந்தபட்ச சம்பளத்தில் பெரிய அதிகரிப்பு இருக்கலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission:அடி தூள்... ஊழியர்களுக்கு 50% அகவிலைப்படி.. அறிவிப்பு விரைவில்!!
2024ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது
கடந்த சில நாட்களாக நடக்கும் விவாதங்களின் அடிப்படையில், 8 ஆவது சம்பள கமிஷன் வராது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், தற்போது 7வது ஊதியக் குழுவிற்குப் பிறகு, அடுத்த ஊதியக் குழுவைக் கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என தெரிய வந்துள்ளது. எனினும் இது குறித்து அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நம் நாட்டில் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் நடக்க உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், தேர்தல் ஆண்டு என்பதால், ஊழியர்களின் அதிருப்தியை எதிர்கொள்ள அரசு தயாராக இருக்காது. ஊழியர்களை மகிழ்விக்க அரசு இந்த பெரிய முடிவை எடுக்கக்கூடும் என அரசியல் வட்டாரங்களும் பொருளாதார நிபுணர்களும் தெரிவித்துள்ளனர்.
அடுத்த சம்பள கமிஷன் தொடர்பான அறிவிப்பை 2024 பொதுத் தேர்தலுக்கு முன் அரசு வெளியிடலாம். புதிய ஊதியக் குழுவில் என்ன செயல்முறைகள் இருக்கும், எவை இருக்காது என்பதற்கு புதிய ஊதியக் குழுவின் தலைவரே முழுப் பொறுப்பாவார். அவரது மேற்பார்வையில் மட்டுமே குழு அமைக்கப்படும். எட்டாவது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டால், ஊழியர்களின் சம்பளத்தில் பெரும் ஏற்றம் ஏற்படும். இதன் காரணமாக ஃபிட்மெண்ட் ஃபாக்டரிலும் சில மாற்றங்கள் ஏற்படலாம். அரசாங்கம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதியக் குழுவை அமைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு அமலுக்கு வருகிறது
2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஊதியக்குழுக்கள்
1947 முதல் பல ஊதியக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதியக் குழுவை அரசு அமைக்கிறது. இந்த ஊதியக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் மத்திய ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியதாரர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படுகிறது.
மேலும் படிக்க | 7th Pay Commission மிகப்பெரிய அப்டேட்: டிஏ ஹைக்குடன் டிஏ அரியர் தொகையும் கிடைக்குமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ