7 ஆவது ஊதியக்குழு புதுப்பிப்புகள்: மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. அதில் இந்த முறை அரசு பல பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்க்கப்படுகின்றது. எப்படியும் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும். ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வுடன், 18 மாத டிஏ நிலுவைத் தொகையையும் அரசு ஊழியர்களின் கணக்கில் போடலாம் என்ற கருத்துகள் வேகமாக பரவி வருகின்றன.
இந்த இரண்டும் கிடைத்தால், அது ஊழியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அரசாங்கம் அகவிலைப்படியை 4 சதவிகிதம் அதிகரிக்கும் என நம்பப்படுகின்றது. இதனால் ஊழியர்களுக்கு மிகப்பெரிய ஆதாயம் கிடைக்கும். எனினும், அகவிலைப்படி உயர்வு தேதி குறித்து மத்திய அரசால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், விரைவில் ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய அறிவிப்புகளை வெளியிடக்கூடும் என வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
அகவிலைப்படியை அரசாங்கம் உயர்த்தவுள்ளது
மத்திய மோடி அரசு, மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படியை மீண்டும் உயர்த்தப் போகிறது. இம்முறையும் முன்பைப் போன்று அகவிலைப்படியில் 4 சதவிகித அதிகரிப்பு இருக்கலாம் என கருதப்படுகின்றது. இதன் பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் மிகபெரிய அதிகரிப்பு இருக்கும். ஜூலை முதல் அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டால், அதன் பிறகு டிஏ மற்றும் டிஆர் 46 சதவிகிதமாக அதிகரிக்கும்.
இதுவரை வந்துள்ள ஏஐசிபிஐ தரவுகளின் படி, ஊழியர்களின் சம்பளம் ஜூலை மாதம் முதல் 3 முதல் 4 சதவீதம் வரை அதிகரிக்கலாம் என கூறப்படுகின்றது. இருப்பினும், இது மே மற்றும் ஜூன் மாதத்திற்கான தரவையும் சார்ந்தது. மே மற்றும் ஜூன் மாதத்திற்கான ஏஐசிபிஐ புள்ளிவிவரங்கள் நன்றாக இருந்தால், அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம் 4 சதவீதம் அதிகரிக்கக்கூடும்.
ஏஐசிபிஐ தரவை வெளியிடுவது யார்?
ஏஐசிபிஐ குறியீட்டின் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படியை அரசு எவ்வளவு உயர்த்தும் என்று முடிவு செய்யப்படுகிறது. ஒவ்வொரு மாதத்தின் கடைசி வேலை நாளில், அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (ஏஐசிபிஐ) புள்ளிவிவரங்கள் தொழிலாளர் அமைச்சகத்தால் வெளியிடப்படுகின்றன. இந்த குறியீடு 88 மையங்களுக்கும் மற்றும் நாடு முழுவதற்கும் தயாரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலையில் காத்திருக்கும் அதிரடி ஊதிய உயர்வு...குஷியில் ஊழியர்கள்
தற்போது, ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 42 சதவீத டிஏ கிடைக்கிறது. இதுவே ஒரு பெரிய தொகையாகும். ஏழாவது ஊதியக் குழுவின் படி, மத்திய ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் டிஏ ஆண்டுக்கு இரண்டு முறை உயர்த்தப்படுகிறது. அந்த திருத்தங்கள் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்கள் முதல் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இப்போது டிஏ உயர்த்தப்பட்டால், அதன் விகிதங்கள் ஜூலை 1 முதல் அமலுக்கு வரும்.
டிஏ அரியர் தொகை குறித்த தகவல்
கொரோனா தொற்று காரணமாக ஜனவரி 2020 முதல் ஜூன் 2021 வரை ஊழியர்களின் அகவிலைப்படி முடக்கப்பட்டது. இந்த நிலுவைத் தொகையை அரசு வழங்குவது பற்றி நீண்ட நாட்களாக பல விவாதங்கள் நடந்து வருகின்றான. 18 மாத நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்பது ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகின்றது. எனினும், அதிகாரப்பூர்வமாக, அரசாங்கம் இது குறித்த அறிவிப்பை இன்னும் வெளியிடவில்லை. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் இது குறித்து அரசாங்கம் ஏதாவது ஒரு தகவலை வெளியிடக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
8வது ஊதியக் குழு:
ஏழாவது ஊதியக் குழுவை ரத்து செய்து புதிய ஊதியக் கொள்கையை கொண்டு வர அரசு யோசித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய முறையில் ஃபிட்மென்ட் ஃபாக்டரின் அடிப்படையில் ஊழியர்களின் சம்பளம் அதிகரிக்கப்படாது. அடுத்த ஆண்டு ஊழியர்களின் சம்பளம் 44% வரை அதிகரிக்கலாம் என ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மேலும் படிக்க | 7th Pay Commission: அரசு ஊழியர்களுக்கு விரைவில் நல்ல செய்தி? சம்பள உயர்வு எப்போது?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ