ஆப்பிள் ஐபோன் 13 ஸ்மார்ட்போன் வாங்க நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த நேரமாக அமைந்துள்ளது.   இ-காமர்ஸ் தளமான அமேசானில் ஆப்பிள் ஐபோன் 13-ஐ ரூ. 59,100 க்கு வாங்க முடியும், ஆனால் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர், தேவையான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை பின்பற்றுவதன் மூலமே இந்த விலைக்கு வாங்க முடியும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | மிகக்குறைந்த EMI-ல் அசத்தலான TVS iQube மின்சார ஸ்கூட்டர்: பெட்ரோல் விலை பற்றி இனி கவலையில்லை


புதிதாக சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆப்பிள் ஐபோன் 13 (128 ஜிபி) ரூ.79,000க்கு விற்கப்பட்ட நிலையில் 6% அதன் விலை குறைக்கப்பட்டு தற்போது அமேசானில் ரூ.74,900க்கு விற்பனை செய்யப்படுகிறது.  கூடுதல் தள்ளுபடியில் இந்த மொபைலை வாங்க விரும்புபவர்கள் எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி வாங்கி கொள்ளலாம்.  இந்த ஐபோன் 13 ஸ்மார்ட்போனிற்கு அமேசான் ரூ.15,8000 வரை எக்ஸ்சேஞ்ச் தள்ளுபடியை வழங்குகிறது, மேலும் இந்த தள்ளுபடி செய்யப்படும் விலையின் அளவு எக்ஸ்சேஞ் செய்யப்படும் மொபைலின் மாடலை பொறுத்து அமைகிறது.



மேலும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் ஆப்பிள் ஐபோன் 13 ஐ வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு  கேஷ்பேக் ஆஃபர் வழங்கப்படுகிறது.  இ-காமர்ஸ் தளமான இந்த அமேசானில் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டு பயன்படுத்தி ஐபோன் 13 வாங்குபவர்களுக்கு  5% கேஷ்பேக் கிடைக்கும்.  இந்த ஐபோன் 13 ஆனது 6.1 சூப்பர் ரெட்டினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது.  இந்த வகை ஸ்மார்ட்போன்கள்  ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் இயங்குகிறது மற்றும் இதில் ஐஓஎஸ் 15 ப்ரீ இன்ஸ்டால் செய்யப்பட்டுள்ளது. iOS 15 உடன் முன்பே நிறுவப்பட்டுள்ளது. 



இதன் பின்புறம் 12 மெகாபிக்சல் கேமராக்களை உள்ளடக்கிய இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.  இதன் மூலம் 4கே-வில் வீடியோக்களை தெளிவாக பதிவு செய்யலாம்.  ஸ்மார்ட்போனின் முன்பக்கத்தில் 12-மெகாபிக்சல் கேமரா உள்ளது, இதிலும் 4கே-வில் ஹெச்டிஆர் உடன் வீடியோக்களை தெளிவாக பதிவு செய்யலாம்.  இந்த 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது மக்சேஃப் வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் வைபை 6 இணைப்பு வசதியையும் கொண்டுள்ளது.


மேலும் படிக்க | பாதி விலையை விட குறைவாக கிடைக்கிறது iPhone 11: அமேசானில் அதிரடி விற்பனை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR