ஹுண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், தனது i10 காரின் விலையினை உயர்த்த திட்டமிட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

வெளியாகி சில தினங்களிலேயே வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற ஹூண்டாய் i10 காரின் விலையானது தற்போது 3% வரை உயர வாய்ப்புள்ளதாக தெரிகிறது. உயர்த்தப்பட்ட விலையானது வரும் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதேவேலையில் இந்நிறுவனத்தின் இதற வாகனங்களுக்கான விலையில் மாற்றம் இருக்காது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஹூண்டாய் நிறுவனத்தின் கிராண்ட் i10 ஆனது கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தியாவில் அறிமுகமானது. அறிமுகத்தின் போது இதன் விலை ரூ.4.29 லட்சத்தில் இருந்து ரூ.6.41 லட்சமாக இருந்தது.


அறிமுகத்திற்கு பின்னர் இந்திய வாடிக்கையாளர்களிடம் கிடைத்த வரவேற்பின் பேரில் இந்த i10-ல் பல்வேறு மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டது. இந்திய பொறியாளர்களின் நேர்த்தியில், இந்திய வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு இந்த வாகனத்தின் வடிவமைப்பில் மாற்றும் கொண்டுவரப்பட்டதால் இந்த வாகனத்திற்கு இந்திய சந்தையில் நல்ல வரவேற்ப்பு கிடைத்தது.


அந்த வகையில் கடந்தாண்டு வெளியான i10 பதிப்பில் முன் மற்றும் பின் பகுதி பம்பர்களில் சிறு வடிவமைப்பு மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதேப்போல் அலாய்வீல், மேம்பட்ட இன்போடெயின்மென்ட் அமைப்பு போன்றவைகளும் புகுத்தப்பட்டுள்ளது.