பிராந்திய கிராமப்புற வங்கிகளுக்கான காலியிடங்களை நிறப்புவதற்காக இன்ஸ்டிடியூட் ஆப் பேங்கிங் பெர்சனல் (IBPS) விண்ணப்பங்களை வரவேற்கிறது. விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் ஜூலை 4, 2019 எனவும் குறிக்கப்பட்டுள்ளது!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பிராந்திய கிராமப்புற வங்கிகளில் உள்ள சுமார் 12,000 காலியிடங்களை நிறப்புவதற்கான அறிவிப்பினை (IBPS) வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் படி அதிகாரி உதவியாளர், அலுவலர் அளவு 1- உதவி மேலாளர், அலுவலர் அளவு 2- மேலாளர் மற்றும் அலுவலர் அளவுகோல் 3- மூத்த மேலாளர் பதவிகளுக்கு தேர்வுகள் நடத்தப்படவுள்ளது.


இப்பதவிகளுக்கான விண்ணப்பங்களை இன்று துவங்கி வரவேற்பதாக IBPS தெரிவித்துள்ளது. மேலும் விண்ணப்பங்களை அனுப்ப இறுதி நாள் வரும் ஜூலை 4, 2019 எனவும் குறிப்பிட்டுள்ளது.


IBPS RRB தேர்விற்கு விண்ணப்பிப்பது எப்படி?...


  • ibps.in என்ற இணைய இணைப்பில் தேர்வாளர்கள் நேரடியாக விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

  • மேற்குறிப்பிட்ட இந்த இணைய இணைப்பில் ‘Click here to apply online for CRP RRB VIII’ என்னும் வசதியை பின்தொடரவும்.

  • பின்னர் தேர்வாளருக்கு தேவையான பதவியை தேர்வு செய்து அதற்கான விண்ணப்பத்தில் கோரப்படும் தகவல்களை உள்ளிடவும்.

  • தேர்வாளர்கள் தங்களது விண்ணப்பத்திற்கு முன்னதாக தாங்கள் முழுவிவரங்களை பதிவு செய்தல் அவசியம் ஆகும். எனவே குறிப்பிட்ட பக்கத்தின் வலது புறம் மேல் பக்கம் உள்ள  ‘New registration’ என்னும் வசதியை தேர்வு செய்து கோரப்படும் தகவல்களை உள்ளிட்டு பதிவு செய்துக்கொள்ளவும்.


IBPS சுற்றறிக்கையின் படி மொத்தம் அறிவிக்கப்பட்டுள்ள காலியிடம் 12000. இதில் அலுவலக உதவியாளருக்கு 7373 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அலுவலர் அளவு 1- உதவி மேலாளர் பதவிக்கு 4856 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 


தேர்வு குறித்த முழுவிவரங்களை அறிய இங்கு கிளிக் செய்யவும்...