PAN- Aadhaar Link: நீங்கள் ஆதார்-பான் கார்டு (Aadhaar-Pan Card) இரண்டையும் இணைக்கவில்லை என்றால், விரைவில் முதலில் அதைச் செய்யுங்கள். அதன் காலக்கெடு 31 மார்ச் 2021 என்றாலும், பயோமெட்ரிக் அடையாள அட்டை ஆதார் உடன் இணைக்கப்பட்ட கணக்குகளின் பட்டியலை அரசாங்கம் சமீபத்தில் வெளியிட்டுள்ளது. ஆதார் அட்டையுடன் 32.71 கோடி பான் அட்டை சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மை வில்லேஜ் இந்தியா தனது ட்விட்டர் (Twitter) பக்கத்தில், "32.71 கோடிக்கும் அதிகமான பான் ஆதார் அட்டையுடன் சேர்க்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஏற்கனவே ஆதார்-பான் அட்டை இணைக்கும் தேதியை 20 மார்ச் 2021 வரை நீட்டித்துள்ளது.


ALSO READ |  பான், ஆதார் அட்டை இணைப்புக்கான காலக்கெடு மார்ச் 31, வரை நீட்டிப்பு..!


அந்த ட்வீட்டில், ஜூன் 29 வரை 50.95 கோடி பான் கார்டு விநியோகிக்கப்பட்டு உள்ளது. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ - UIDAI) 12 இலக்க ஆதார் அட்டையை அனைவருக்கும் வழங்கி வருகிறது. அதே நேரத்தில் வருமான வரித் துறை  (Income tax) எந்தவொரு தனிநபருக்கோ அல்லது நிறுவனத்துக்கோ 10 இலக்கங்களுடன் நிரந்தர கணக்கு எண்ணை (Permanent Account number) வழங்கி வருகிறது.


வருமான வரித்துறையின்படி, சரியான நேரத்தில் பான் கார்டு ஆதாருடன் இணைக்கப்படாவிட்டால், அது பயனற்றதாகிவிடும். 


ALSO READ |  பான் அட்டை வைத்திருப்பவர்கள் ஆதாருடன் இணைக்கவில்லை என்றால் ரூ .10,000 அபராதம் விதிக்கப்படலாம்


இந்த செயல்முறையை நிறைவு செய்வதற்கான ஆரம்ப காலக்கெடு 2020 மார்ச் 31 ஆகும். இருப்பினும், கொரோனா வைரஸ் (Coronavirus) காரணமாக நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு (Lockdown) போடப்பட்டதை அடுத்து, நிதி அமைச்சர் நிர்மலா சித்ராமன் ஜூன் 30 வரை காலகெடுவை நீட்டித்து அறிவித்திருந்தார். மேலும், புதிய பான் கார்டைப் பெற ஆதார் அட்டை வைத்திருப்பது கட்டாயமாகும்.