சாராயக் கடையை திறந்தால் ஓடி ஒளியும் கொரோனா, டெல்லி பெண்ணின் கோரிக்கை Video Viral
தற்போதைய கொரோனா வைரசுக்கு தீர்வு என்ன என உலகமே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி அசால்டாக ஒரு முடிவைச் சொல்கிறார். அதற்கு வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது.
தற்போதைய கொரோனா வைரசுக்கு தீர்வு என்ன என உலகமே ஓடிக் கொண்டிருக்கும் நிலையில், டெல்லியைச் சேர்ந்த நடுத்தர வயது பெண்மணி அசால்டாக ஒரு முடிவைச் சொல்கிறார். அதற்கு வரவேற்பும் அதிகமாகவே இருக்கிறது.
அந்த பெண் சொல்லும் சுலபமான வழியை கேட்டால், மிகவும் பழமையான வழியாகவே இருக்கிறது. புதுமையான எதுவும் இல்லை என்றாலும், அனைவருக்கும் பிடித்தமானது என்பது தான் விஷயத்தின் சுவாரசியம்.
மதுபானக் கடைகளை திறந்துவிடுங்கள், சாராய ஆறு ஓடினால், கொரோனா அடித்துச் செல்லப்படும். பிரச்சனை முடிந்தது என்று வெள்ளேந்தியாக சொல்லும் ஆண்டியின் பெயர டோலி, டெல்லியில் வசிக்கிறார்.
Also Read | Coronavirus: இந்தியாவுக்கு ரஷ்யாவின் அவசரகால உதவிகள்
குடிமகன்கள் குடியை நோக்கி சென்றுவிட்டால், மருத்துவமனைப் பற்றாக்குறையும் இருக்காது, இறுதியில் அரசாங்கத்திற்கும் பிரச்சினைகள் இல்லை என்கிறார் அதிபுத்திசாலி டோலி ஆண்ட்டி.
சில நாட்களுக்கு முன்னதாக ஒரு வீடியோவை வெளியிட்ட இதே டோலி ஆண்ட்டி, எந்தவொரு தடுப்பூசியும் ஆல்கஹால் அளவுக்கு வீரியம் கொண்டதில்லை என்று தெரிவித்திருந்தார்.
ஆல்கஹால் மட்டுமே சரியான சிகிச்சை தரும், எஞ்சியதெல்லாம் சும்மா என்றும் அவர் சொல்லியிருந்தார். 35 ஆண்டுகளாக தான் சாராயம், ஆல்கஹால் குடித்து வருவதாகவும், வேறு எந்த மருந்தும் தேவையில்லை என்றும் டோலி ஆண்ட்டி, கூறினார்.
Also Read | 18+ கோவிட் தடுப்பூசிகளுக்கு சிக்கல்; கையறு நிலையில் மருத்துவமனைகள்!
இப்போது, அவர் இன்னொரு வீடியோவில் பேசியுள்ள டோலி ஆண்ட்டி, மதுபானக் கடைகளை மீண்டும் திறக்குமாறு அதில் அவர் டெல்லி அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். மதுபானக் கடைகள்
திறக்கப்பட்டால், மருத்துவமனை படுக்கைகள் காலியாகிவிடும், மேலும் அரசாங்கம் பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியதில்லை. என்கிறார்.
"மதுபானக் கடைகள் திறக்கப்பட்டால், மருத்துவமனைகளில் படுக்கைகள் காலியாக இருக்கும், தில்லி அரசு இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்ளாது, ஆக்ஸிஜன் சிலிண்டரின் பிரச்சினையும் நீங்கும். மக்கள் மது அருந்தினால், உடலில் உள்ள கொரோனா வெளியே சென்றுவிடும்”என்று அவர் வீடியோவில் கூறுகிறார்.
வீடியோவை இங்கே பாருங்கள்:
இந்த லாக்டவுனிலும் குடிப்பதற்கு உங்களிடம் சரக்கு இருக்கிறதா என்று வீடியோ எடுக்கும் நபர் டோலி ஆண்டியிடம் கேட்கிறார். தன்னிடம் போதுமான அளவு மது இருந்ததாகவும், ஆனால், இப்போது எல்லாமே தீர்ந்துவிட்டது என்றும் வருத்தப்படுகிறார் ஆண்ட்டி.
அதனால் தான் விரைவில் கடைகளை திறக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கிறேன் என்றும் இந்த நடுத்தர வயது பெண்மணி சொல்கிறார்.
டெல்லியில் லாக்டவுன் விதிக்கப்பட்ட உடனேயே, பல பகுதிகளில் உள்ள மதுபானக் கடைகளுக்கு வெளியே நீண்ட வரிசைகள் காணப்பட்டன, மக்கள் மதுவை சேமிக்க விரைந்தனர். அவர்களில் ஒருவரான டோலி அத்தை, அவரது பேசிய வீடியோவால் வைரலாகிவிட்டார்.
Also Read | கோவிட் நோயாளிகளுக்கு மூன்றடுக்கு மருத்துவ முகக்கவசம் அவசியம்
ANI செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “தடுப்பூசிகள் போடுவதற்கோ, மருந்துகளை வாங்கி சேர்க்கவோ நான் இங்கு வரவில்லை. வைரஸில் இருந்து என்னை பாதுகாக்க இரண்டு பாட்டில்கள் மதுபானங்களை வாங்க நான் இங்கு வந்துள்ளேன். நான் 35 ஆண்டுகளாக குடித்து வருகிறேன், ஒருபோதும் எந்த மருந்தையும் எடுத்துக் கொண்டதில்லை. ஆல்கஹால் குடிப்பவர்கள் அனைவரும் கோவிட்டிலிருந்து பாதுகாப்பாக உள்ளனர்” என அதிரடியாக தெரிவித்து பிரபலமானவர் டோலி ஆண்ட்டி.
வயதான பெண்ணின் தைரியமான மற்றும் வித்தியாசமான அணுகுமுறை பலரை மகிழ்வித்தது, மற்றவர்கள் அவரது கருத்துக்கு மீம்களை பகிர்ந்து கிண்டலடித்தனர்.
ALSO READ: தேர்தல் ஆணையம் மீது கொலைக் குற்றம் சுமத்தினால் கூட தவறில்லை: நீதிமன்றம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR