தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மும்பை: தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்படுமெனில் 4 மாதங்களுக்கு மேற்பட்ட கருவை நீதிமன்ற அனுமதியின்றி மருத்துவர் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 20 வாரங்களுக்கு மேற்பட்ட கருவைக் கலைக்க நீதிமன்றத்தின் அனுமதி அவசிம் என மும்பை நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


மும்பை உயர்நீதிமன்றத்தில் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்து மனு தாக்கல் செய்துள்ளார். அதில், எனது வயிற்றிலுள்ள கரு 20 வார காலத்தை கடந்துவிட்டது. அந்த கரு நீடிப்பது எனது உயிருக்கும், அதன் உடல்நலத்துக்கும் ஆபத்து; ஆதலால் அதை கலைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு, மும்பை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். ஒஹா, எம்.எஸ். சோனாக் ஆகியோரைக் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.


கருக்கலைப்புக்காக உயர்நீதிமன்றத்தின் அனுமதியை நாடி பல வழக்குகள் நீதிமன்றங்களுக்கு தொடர்ந்து வருவதாக மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது. மேலும், தாயின் உயிருக்கு உடனடி ஆபத்து ஏற்படும் என்றாலோ, அல்லது குழந்தை அசாதாரண நிலையில் பிறக்கும் என்றாலோ நீதிமன்ற அனுமதியின்றி பதிவு செய்த மருத்துவரே கருவைக் கலைக்கலாம் என மும்பை உயர்நீதிமன்ற அமர்வு தெரிவித்துள்ளது.


அதுபோன்ற சமயத்தில் கருக்கலைப்பு மேற்கொள்ளும் பதிவு செய்யப்பட்ட மருத்துவருக்கு மருத்துவக் கருக்கலைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் என தெரிவித்துள்ளது. அதேசமயம், சம்பந்தப்பட்ட பெண்ணோ உறவுகளோ கருக்கலைப்புக்கு பொறுப்பேற்று அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கக் கூடாது என்று சுட்டிக்காட்டிய உயர்நீதிமன்றம் மகாராஷ்டிர அரசு இதுபோன்ற சம்பவங்களுக்குத் தீர்வு காண கொள்கை வகுத்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.