பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பதற்கான கடைசி தேதி நெருங்கி வருகிறது. அனைத்து பான் கார்டு வைத்திருப்பவர்களும் தங்களது பான் கார்டு ஆக்டிவ் ஆக இருப்பதை உறுதிசெய்ய, தங்கள் பான் கார்டை ஆதார் அட்டையுடன் இணைக்க வேண்டும். இருப்பினும், இது ஏற்கனவே இணைக்கப்பட்டுள்ளதா என்று பலர் சந்தேகிக்கலாம். எனவே, உங்கள் ஆதார் உங்கள் பான் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பதை முதலில் சரிபார்க்குமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பான் கார்டு


பான் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்கும் செயல்முறை எளிதானது. பான் கார்டுடன் ஆதார் இணைக்கப்படவில்லை என்றால், ரூ. 1,000 அபராதம் செலுத்தி 30 ஜூன் 2023க்குள் இணைக்க வேண்டும். 30 ஜூன் 2023 அன்று அல்லது அதற்கு முன் வரி செலுத்துவோர் தங்களது நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையுடன் ஆதாரை இணைப்பதை அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது.


பான் கார்டு ஆதார் அட்டை


வரி செலுத்துவோர் தங்களது ஆதாரை பான் கார்டுடன் இணைக்கவில்லை எனில், 1 ஜூலை 2023 முதல் பான் கார்டு முடங்கி விடும். உங்கள் ஆதார் அட்டை மற்றும் பான் கார்டை இணைக்க விரும்பினால், கீழ்கண்ட செயல்முறையை நீங்கள் பின்பற்றலாம்...


1. வருமான வரி இ-ஃபைலிங் போர்ட்டலான https://incometaxindiaefiling.gov.in/ என்ற தளத்திற்கு செல்லவும்


2. அதில் பதிவு செய்யுங்கள். அதில் உங்கள் பான் கார்டு உங்கள் பயனர் ஐடியாக இருக்கும்.


3. பயனர் ஐடி, கடவுச்சொல் மற்றும் பிறந்த தேதியை உள்ளிட்டு உள்நுழைக.


4. உங்கள் பான் எண்ணை ஆதாருடன் இணைக்கும்படி கேட்கும் பாப் அப் விண்டோ ஒன்று தோன்றும். 


மேலும் படிக்க | PPF -ல் பணம் போடுகிறீர்களா? உங்களுக்கு தான் இந்த முக்கிய அப்டேட்


5. அது காட்டப்படவில்லை என்றால், மெனு பாரில் உள்ள ‘Profile Settings’ என்பதற்குச் சென்று, ‘Link Aadhaar’ என்பதைக் கிளிக் செய்யவும்.


6. PAN விவரங்களின்படி பிறந்த தேதி மற்றும் பாலினம் போன்ற விவரங்கள் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருக்கும்.


7. உங்கள் ஆதாரில் உள்ள விவரங்களுடன் திரையில் பான் விவரங்களைச் சரிபார்க்கவும். 
8. ஏதேனும் பொருத்தமின்மை இருந்தால், அதை நீங்கள் ஆவணத்தில் சரி செய்ய வேண்டும்.


9. விவரங்கள் பொருந்தினால், உங்கள் ஆதார் எண்ணை உள்ளிட்டு, "Link Now" பொத்தானைக் கிளிக் செய்யவும்.


10. உங்கள் ஆதார் உங்கள் பான் எண்ணுடன் வெற்றிகரமாக இணைக்கப்பட்டுள்ளது என்பதை ஒரு பாப்-அப் செய்தி உங்களுக்குத் தெரிவிக்கும். 
பான் மற்றும் ஆதாரை இணைக்க நீங்கள் https://www.utiitsl.com/ அல்லது https://www.egov-nsdl.co.in/ என்ற தளங்களையும் பார்வையிடலாம்.


பான் கார்டு மற்றும் ஆதார் அட்டையை இணைப்பது மிகவும் முக்கியம். வரி ஏய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்றவற்றை தவிர்க்க மக்கள் அனைவரும் பான் எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. எனினும், 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் கூட பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க தேவையில்லை. அதே போன்று, வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRI) பான் ஆதார் அட்டையை இணைக்க வேண்டிய அவசியமில்லை. பான் ஆதார் அட்டையை இணைப்பதற்கான காலக்கெடுவை மத்திய அரசு ஏற்கனவே பலமுறை நீட்டித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க | EPS Higher Pension: அதிக ஓய்வூதியம் குறித்து அரசு அளித்த பெரிய அப்டேட்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ