தூங்கி எழுந்ததும் செல்போனை பார்க்கிற பழக்கம் இருக்கா... இந்த செய்தியை படியுங்க..!!
இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. பலருக்கு அது இல்லை என்றால், பைத்தியம் பிடித்து விடும் நிலை ஏற்படுகிறது எனலாம்.
காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பார்க்கும் பழக்கமும் உள்ளவரா நீங்கள், அப்படியானால், இந்த செய்தி உங்களுக்கு தான்.
இன்றைய காலகட்டத்தில், மொபைல் என்பது அனைவரின் வாழ்க்கையிலும் ஒரு முக்கியமான அங்கமாக மாறி விட்டது. பலருக்கு அது இல்லை என்றால், பைத்தியம் பிடித்து விடும் நிலை ஏற்படுகிறது எனலாம். இன்று, மொபைல் இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து பார்க்க முடியாது.
மக்கள் வாழ்க்கையில் மொபைல் மிகவும் ஆதிக்கம் செலுத்துகிறது. தூங்கும் போது மட்டும் தான் மொபைலை பயன்படுத்துவதில்லை.
காலையில் எழுந்தவுடன் தொலைபேசியை பார்க்கும் பழக்கம் கொண்டவர்கள் பலர் உள்ளனர். காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பயன்படுத்துவது பல வகையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா... அதைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
- பிரிட்டனின் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், காலையில் எழுந்தவுடன் தொலைபேசியைப் பயன்படுத்துபவர்கள், மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் என்பது தெரிய வந்துள்ளது. மேலும், இதுபோன்றவர்கள் ஈடுபாட்டுடன் எந்த வேலையும் செய்ய முடியாமல் தங்கள் வேலையில் பல சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்படுகிறது.
நாம் அனைவரும் காலையில் எழுந்தவுடன் மொபைலில் வரும் நோடிஃபிகேஷன்கள் அல்லது பேஸ்புக், வாட்ஸ் அப்பில் வரும் தகவல்கள் ஆகியவற்றை பார்க்கும் போது, நம் மனதில் அந்த நேரத்தில் அதைப்பற்றி சிந்திக்கத் தொடங்குகிறது. இதன் காரணமாக நம் மனம் வேறு எந்த வேலையிலும் ஈடுபடுவதில்லை. அவ்வாறு செய்வது நமது செயல்திறனையும் பாதிக்கிறது.
- நாம் காலையில் எழுந்ததும், தொலைபேசியைப் பார்க்கும்போது, நாள் முழுவதும் அதில் பார்த்த தகவல்கள் நம்மில் பாதிப்பை ஏற்படுத்தி, அதை பற்றியே சிந்திக்கிறோம், இதன் காரணமாக நமக்கு மன அழுத்தமும் பதட்டமும் ஏற்படுகிறது.
- காலையில் எழுந்தவுடன் பேஸ்புக் வாட்ஸ் அப் போன்றவற்றை பார்க்கும் போது, அவற்றில் வரும் மனதை பாதிக்கக் கூடிய கடந்த கால விஷயங்களைப் படித்த பின் மனம் வருத்தப்படுகிறது. அதில் உள்ளள விஷயங்களை மறந்துவிடுவதற்குப் பதிலாக, பழைய விஷயங்களில் மீண்டும் நம் மனம் சென்று ஒரு வித மன உளைச்சல் ஏற்படுகிறது.
அதனால், காலையில் எழுந்தவுடன், மொபைலை பார்ப்பதை தவிர்த்து, உங்கள் அன்றாட பணிகளில் மனதை செலுத்தவும்.
ALSO READ | Doomsday Clock அளிக்கும் பகீர் சமிக்ஞை.. உலகம் அழிவின் விளிம்பில் உள்ளதா..!!!
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR