புதுடில்லி: பிரபஞ்சத்தில் எப்போதும் சில மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும். மனிதகுலத்தின் முன்னால் டூம்ஸ்டேயின், அதாவது அழிவு மற்றும் ஆபத்தைக் காட்டும் கடிகாரம் இந்த நேரத்தில் ஒரு ஆபத்தான சைகை செய்கிறது. இந்த கடிகாரம் நள்ளிரவில் இருந்து சுமார் 100 வினாடிகள் தொலைவில் உள்ளது. கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவை அடைவது என்பது உலகில் அழிவைக் குறிக்கிறது. உலகம் தற்போது கொரோனா வைரஸ் தொற்று (Corona Virus Pandemic), அணுஆயுத போர் (Nuclear War) மற்றும் காலநிலை மாற்றத்துடன் (Climate Change) போராடுகிறது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த கடிகாரம் 2020 ஆம் ஆண்டில் இதே நேரத்தை காட்டியது.
டூம்ஸ்டே கடிகாரம் என்ன சொல்கிறது
அணு விஞ்ஞானியின் புல்லட்டின் குழுவின் தலைவர் ரேச்சல் புல்சன் கூறுகையில், 'டூம் கடிகாரத்தின் முட்கள் நள்ளிரவில் இருந்து 100 வினாடிகள் தொலைவில் உள்ளன. முட்கள் முன்பை விட நள்ளிரவுக்கு நெருக்கமாக உள்ளன. இந்த கடிகாரம், பூமி அழிவுக்கு எந்த அளவு நெருக்கமாக இருக்கிறோம் என்பதை காட்டுகிறது. கடிகாரம் கடந்த ஆண்டு நள்ளிரவில் இருந்து 2 நிமிடங்கள் தொலைவில் இருந்தது, பின்னர் அது 100 வினாடிகளாக குறைந்துள்ளது.
ALSO READ | Elon Musk: SpaceX நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் ராக்கெட் தரையிறங்கும் போது வெடித்ததா..!!
டூம்ஸ்டே என்றால் என்ன
கோவிட் -19 (COVID-19) தொற்றுநோய் என்பது இதன் அறிகுறி தான். அணு ஆயுதங்களையும், காலநிலை மாற்ற அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள உலகின் அரசாங்கங்களும் சர்வதேச நிறுவனங்களும் தயாராக இல்லை என்பதையே இது குறிக்கிறது. இந்த டூம்ஸ் டே கடிகாரம் நள்ளிரவை அடையும் போது என்ன நடக்கும் என்பதை அறிந்தால் அதிர்ச்சியடைவார்கள்.
பேரழிவு குறித்த சமிக்ஞை
டூம்ஸ்டே கடிகாரம் (Doomsday Clock) இந்த கடிகாரத்தை 1947 இல் அணு விஞ்ஞானிகள் அடங்கிய Bulletin Of The Atomic Scientists என்னும் குழு உருவாக்கியது. இது ஒரு இலாப நோக்கம் ஏதும் இல்லாமல் செயல்படும் குழு, இது 1945 ஆம் ஆண்டில் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் சிகாகோ பல்கலைக்கழக மாணவர்களால் உருவாக்கப்பட்ட குழு. அதன் குழு உறுப்பினர்களில் 13 நோபல் பரிசு வென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டூம்ஸ்டே கடிகாரம் பூமி அழிவிற்கு எந்த அளவு நெருக்கமாக உள்ளது என்பதைக் காட்டுகிறது. அணுசக்தி நிகழ்வுகளும் காலநிலை மாற்றத்தின் ஆபத்துகளும் உலகை எவ்வளவு நேரம் பாதிக்கின்றன என்பது இந்த கடிகாரத்திலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. மறுபுறம், பாவா வாங்கா 2021 பற்றி பல கணிப்புகளையும் செய்துள்ளார். அவரது கணிப்பின்படி, 2021 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்கு ஆபத்தான ஆண்டாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
ALSO READ | 2021 அமைதிக்கான நோபல் பரிசு: டிரம்ப், கிரேட்டா தன்பெர்க், நவல்னி ஆகியோர் பரிந்துரை
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR