Earn with these rare coins: வைஷ்ணோ தேவியின் புகைப்படத்துடன் கூடிய 5 மற்றும் 10 ரூபாய் நாணயங்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் வீட்டில் உள்ளபடியே கோடீஸ்வரர் ஆவதை யாரும் தடுக்க முடியாது. ஊடக அறிக்கையின்படி, இந்த நாணயங்களுக்கு பதிலாக நீங்கள் இந்திய ரூபாயில் 10 லட்சம் வரை சம்பாதிக்கலாம். அதாவது, ஒரு நாணயத்தின் மூலம் உங்கள் வாழ்க்கையே மாறிவிடும். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நாணயம் அதிர்ஷ்டமான நாணயமாகக் கருதப்படுகின்றது


இந்து மதத்தில், வைஷ்ணோ தேவியின் (Vaishno Devi) உருவத்தைக் கொண்ட நாணயம் மிகவும் அதிர்ஷ்டமான நாணயமாக கருதப்படுகிறது. இதை அம்மனின் ஆசீர்வாதம் என்று கருதி, பலர் அதை தங்கள் பணப்பையில் வைத்திருக்கிறார்கள். இப்படி செய்வதால் எப்போதும் தங்களுக்கு பண பற்றாக்குறை ஏற்படாது என அவர்கள் கருதுகிறார்கள். இதற்காக நடத்தப்படும் ஏலங்களில் மக்கள் இந்த 5 அல்லது 10 ரூபாய் நாணயங்களை என்ன விலைக்கு வேண்டுமானாலும் வாங்க தயாராக உள்ளனர். இந்த நாணயங்களை 2002 ஆம் ஆண்டில் அரசாங்கம் வெளியிட்டன என்பது குறிப்பிடத்தக்கது. 



10 லட்சம் ரூபாய் எங்கே, எப்படி கிடைக்கும்?


இதுபோன்ற நாணயங்களுக்கு (Old Coins) indiamart.com இல் அவ்வப்போது ஏலம் நடக்கிறது. இந்த தளத்திற்கு சென்று, நீங்கள் முதலில் உங்களை விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டும். இதற்குப் பிறகு, நீங்கள் நாணயத்தின் இருபுறத்தின் புகைப்படத்தையும் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். இதன் பின்னர், இதை வாங்க விரும்புவோர் தாங்கள் இதற்கு கொடுக்க விரும்பும் பணத்தை ஏலத்தில் கூறுவார்கள். மிக அதிக பணம் கொடுக்கும் நபருக்கு நீங்கள் இந்த நாணயத்தை விற்கலாம். 


ALSO READ: இந்த 2 ரூபாய் காயின் இருந்தால் லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிக்கலாம் -முழு விவரம்


அசோக சக்கரம் உள்ள ரூபாய் நோட்டுகளை 20-25 ஆயிரத்திற்கு விற்கவும்


இதேபோல், பிரிட்டிஷ் ஆட்சியின் போது புழக்கத்தில் இருந்த ரூபாய் நோட்டுகள் (Old Rupee Note) உங்களிடம் இருந்தால், அவற்றின் மூலமும் நீங்கள் நல்ல லாபம் ஈட்டலாம். அந்த காலத்து நோட்டுகளில் அசோக சக்கரம் அச்சிடப்பட்டிருக்கும். இப்போது இந்த நோட்டுகள் அரிதாகவே காணப்படுகின்றன. ஆனால் உங்களிடம் இந்த சிறப்பம்சம் வாய்ந்த நோட்டுகள் இருந்தால், உங்களுக்கு அதிர்ஷ்டம்தான். நீங்கள் ஒரு நோட்டுக்கு ஈடாக 20-25 ஆயிரம் ரூபாய் பெற முடியும். இதில் நல்ல விஷயம் என்னவென்றால், வீட்டில் இருந்தபடியே நீங்கள் இவற்றை ஆன்லைனில் விற்கலாம். 


இந்த தளங்களில் ஆன்லைனில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை விற்கலாம்


1. http://dir.indiamart.com/impact/old-coins.html
2. https://in.pinterest.com/080841052o/sell-old-coins/
3. http: www.indiancurrencies.com


ALSO READ: 2020-21 ஆம் ஆண்டில் போலி ரூ .500 நோட்டுகள் 31% அதிகரித்துள்ளன: கவனமாக இருங்கள்!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR