புனேவில் சாலையில் உமிழ்வோருக்கு நூதன தண்டனை கொடுக்கப்படும் என அம்மாநில மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது...! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்தியாவை பொறுத்தவரையில் தெருக்களில் யோசிக்காமல் எச்சில் உமிழ்வோர் அதிகம். இதற்காகவோ என்னவோ தெரியவில்லை இந்தியாவில் பிரதமர் மோடி கிளீன் இந்தியா திட்டத்தை கொண்டுவந்துள்ளார். இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவில், சாலைகளில் எச்சில் உமிழ்வோரைப் பிடித்து அவர்களையே சுத்தம் செய்ய வைக்கும் தண்டனையை மாநகராட்சி நிர்வாகம் வழங்கி வருகிறது.


புனேயை தூய்மையாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளில் அந்த மாநகராட்சி நிர்வாகம் தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 8 நாட்களில் மட்டும் 156 பேர் பிடிபட்டுள்ளனர். பிடிபடுபவர்கள் தாங்கள் எச்சில் உமிழ்ந்த இடத்தை சுத்தம் செய்ய வைக்கப்படுவதுடன், 150 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது.


விழிப்புணர்வுக்காக மட்டுமே இந்த தண்டனை வழங்கப்படுவதாகவும், போதுமான அளவுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திய பின்னர், இது தளர்த்தப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.