பெரும்பாலான குழந்தைகள் பிடிவாதமாக இருப்பதை நாம் பார்க்கிறோம். குழந்தைகள் பிடிவாதமாக இருப்பது மிகவும் பொதுவான பிரச்சனை என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். ஆனால், எல்லா விஷயத்திற்கும் அடம் பிடிப்பது என்ற பழக்கம் இருந்தால், அந்த பழக்கம் குழந்தையின் எதிர்காலத்தை பாதிக்கும். அப்படிப்பட்ட குழந்தைகளை வழிக்கு கொண்டு சில வழியை, யோசனைகளை பின்பற்றலாம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அடம்பிடிக்கும் குழந்தையை கையாளும் முறைகள்


1. குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள்


குழந்தைகளுடன் வாக்குவாதம் செய்யாதீர்கள். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகள் எப்போதும், வாக்குவாதம் செய்ய தயாரான மனநிலையில் இருப்பார்கள். எனவே அவர்களுக்கு வாக்குவாதம் செய்ய வாய்ப்பளிக்காதீர்கள். வாக்குவாதம் செய்யமால் இருந்தால், குழந்தைகளும் உங்களை பேச்சை கவனமாக கேட்க தொடங்குவார்கள்.


2. குழந்தைகளைக் திட்ட வேண்டாம்


உங்கள் பிள்ளை பிடிவாதமாக இருந்தால், அடம் பிடித்தால், அவரை கத்துவதற்கும், கோபிப்பதற்கு பதிலாக அவர்களை நேசிக்கவும். அவர்களுடன் நன்றாக பேசுங்கள். நீங்கள் அவர்களிடம் அன்போடு பேசினால், குழந்தைகளும் அதிக கத்த மாட்டார்கள். இதைச் செய்வதன் மூலம் நீங்கள் அவர்களுக்கு சரி மற்றும் தவறு ஆகியவற்றுக்கு இடையிலான வித்தியாசத்தை விளக்கி அவர்களை நல்வழிப்படுத்தலாம்.


3. மனதில் உள்ளதை புரிந்துகொள்வது முக்கியம்


குழந்தைகளின் மனதை நாம் புரிந்துகொள்வது மிகவும் முக்கியம். சில நேரங்களில் குழந்தைகள் பெற்றோரின் கவனத்தை ஈர்க்க சில குழந்தைகள் அடம் பிடிக்கும். குழந்தைகளுக்கு தங்களது பிரச்சனைகளை எடுத்து சொல்லத் தெரியாது, அதனால் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் அடம் பிடிக்கலாம். எனவே குழந்தைகளின் நடவடிக்கைகளை கவனித்து, அதனை புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள். தினமும் 30 நிமிடங்களுக்கு குழந்தையுடன் தனிப்பட்ட முறையில் பேச நேரத்தை செலவிடுங்கள். 


ALSO READ | Brain Foods: இந்த ‘5’ உணவுகள் குழந்தையின் மூளை கணிணி போல் இயங்க உதவும்


4. குழந்தைகளுக்கு பேச வாய்ப்பு கொடுங்கள்


உங்கள் எண்ணத்தை குழந்தைகள் மீது திணிக்காதீர்கள், ஆனால் அவர்களுக்கும் பேச வாய்ப்பு கொடுங்கள். நீங்கள் அவர்களுக்கு பேச வாய்ப்பு கொடுத்தால், அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்கப்பார்கள். மேலும் அவர்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டால், அவர்களை நன்றாக புரிந்து கொள்ள முடிவதுடன், ஒரு ஆரோக்கியமான உறவும் ஏற்படும்.


5. விதிகளை ஏற்படுத்தி அவற்றைப் பின்பற்றுமாறு கூறவும்


பிடிவாதமான குழந்தைகளை சமாதானப்படுத்தவும் சமாளிக்கவும் சில விதிகளை ஏற்படுத்துவது மிகவும் முக்கியம். தப்பு செய்தால் தீங்கு ஏற்படும் என்பதை புரிய வைக்கவும். குழந்தைகளை அடிக்காமல், திட்டாமல், நீங்கள் கூறும் விஷயத்தில் உறுதியாக இருந்தால், குழந்தையின் பிடிவாதம் ஓரளவு குறையும். ஆனால் நீங்கள் ஏற்படுத்தும் விதிகள் மிகவும் கடுமையானதாக இருக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


குழந்தைகளை நல்வழிப்படுத்த. குழந்தைக்குத் தேவையான நற்குணங்களை ஏற்படுத்தும் சரித்திர கதைகளைச் சொல்லலாம். பிடிவாதம் பிடிக்கும் குழந்தைகளை யாரும் ரசிக்க மாட்டார்கள் என்பதை கதைகள் மூலம் புரிய வைக்கலாம். 


பொறுப்பு துறப்பு: இங்கு வழங்கப்பட்ட தகவல்கள் எந்த மருத்துவ ஆலோசனைகளுக்கும் மாற்றாக இல்லை. இது பொதுவான விழிப்புணர்வு நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது.


ALSO READ | ஆயுர்வேத பொருட்கள் ரசாயன தயாரிப்புகளுக்கு சிறந்த மாற்றாக இருக்குமா..!!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR