IFFCO நிறுவனத்தின் நானோ உரங்கள் விவசாய உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் என்று IFFCO நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டாக்டர் யு.எஸ். அவஸ்தி தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்த நானோ உரங்களுக்கு சரியான பாதையில் காப்புரிமை பெறப்படும் என தெரிவித்த அவர், குறிப்பிட்ட இந்த நானோ உரத்தின் இரண்டு கிராம் அளவு, 100 கிலோ யூரியா அளிக்கும் மகசூலை அளிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.


IFFCO-வின் புல்பூர் யூனிட்டில் ஊழியர்களுடன் ஊடகங்கள் நடத்திய கலந்துரையாடலின் போது அவஸ்தி தெரிவிக்கையில்... "விவசாயிகளின் தேவை அறிந்து கொண்டுவரப்பட்டுள்ள இந்த நானோ உரம், உற்பத்திக்கான விலையில் ஒரு புரட்சிகரமான படியாக அமையும். மண்ணில் உள்ள சக்தி ஏற்றத்தாழ்வுகளை குறைத்து, வளமான மகசூலை அளிக்கும்" என தெரிவித்தார்.


இந்த நானோ உரத்தின் பயன்பாட்டை அறிந்துகொள்ள ஏதுவாக பரிசோதனை ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதாவது 100% நானோ உரம் கொண்டு ஒரு இடத்திலும், அதே அளவிலான மற்றொரு இடத்தில் 75% நானோ உரம் மற்றும் 25% ஊரியா கொண்டு பயிரிடப்பட்டது. இந்த இரண்டு இடங்களிலும் மகசூல் திறன்களில் பற்றாக்குறை ஏதும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


மேலும் இந்த பரிசோதனையை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் விதமாக IFFCO நாடுமுழுவதும் 45 லட்சம் வேப்ப மரங்களை நட்டதாகவும், இந்த வேப்ப பரங்களுக்கு நானோ உரம் பயன்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்தார். ஒரு வேப்ப மரம் முழுமையாக வளர்ச்சி அடைய 10 ஆண்டுகள் ஆகும், ஆனால் இந்த நானோ உரங்கள் காரணமாக வெறும் 5 ஆண்டுகளில் இந்த மரங்கள் முழு வளர்ச்சி அடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


தற்போது ஒரு உயிரியல் தோட்டம் அமைப்பது குறித்து சிக்கிம் அரசாங்கத்துடன் IFFCO பணியாற்றி வருகிறது. அங்கு உயிரியல் தயாரிப்புகள் பதப்படுத்தப்பட்டு, விற்பனை செய்யப்படுகிறது. அதேப்போல் பஞ்சாபில், ஸ்பானிஷ் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ஒரு தொழிற்சாலை அமைக்கப்பட்டிருக்கிறது, அங்கு காய்கறிகள் உறைந்த நிலைக்கு கொண்டுச்வசெல்லப்பட்டு மற்றும் ஏற்றுமதி செய்யப்படுகிறது எனவும் தெரிவித்தார்.