Startup Expo: 100 ஸ்டார்ட்அப்களை உலகுக்கு அறிமுகம் செய்யும் ஐஐடி மெட்ராஸ்
IIT Madras Startup Expo: ஸ்டார்ட்அப் எக்ஸ்போவில் பங்கேற்பது, ஸ்டார்ட்அப்களுக்கு ஐஐடி மெட்ராஸின் திறமை, புதுமுறைகாணல் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் தங்களையும் இணைத்துக்கொள்வதற்கான வாயில்களைத் திறக்கிறது.
ஈ-சம்மிட் ஸ்டார்ட்அப் எக்ஸ்போ 2024 -இல் 100 இனொவேடிவ் ஸ்டார்ட்அப்களை உலகுக்கு அறிமுகம் செய்கிறது ஐஐடி மெட்ராஸ்
அறிமுகம்
சென்னையின் இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் தொழில்முனைவோர் பிரிவு, ஸ்டார்ட்அப் எக்ஸ்போ என்ற அற்புதமான நிகழ்வை நடத்த உள்ளது. தென் பிராந்தியத்தில் மிகப் பெரிய புராடக்ட் கண்காட்சியாக பேசப்படும் இந்த பிரம்மாண்ட எக்ஸ்போ, 100 புதுமையான ஸ்டார்ட்அப்களுக்கு தனித்துவமான மற்றும் இணையற்ற வாய்ப்பை வழங்குகிறது.
கல்வித்துறையில் உன்னதம் மற்றும் புதுமுறைகாணலுக்கு பெயர்போன ஐஐடி மெட்ராஸ், இந்த எக்ஸ்போவை நடத்துவதன் மூலம், ஸ்டார்ட்அப் துறையை வளர்ப்பதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடையவுள்ளது.
ஸ்டார்ட்அப் எக்ஸ்போ என்றால் என்ன?
மார்ச் 7 முதல் மார்ச் 10 வரை, E-Cell IITM ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு மாபெரும் தொழில்முனைவோர் விழாவான ஈ-சம்மிட் 24 -இன் ஒரு பகுதிதான் ஸ்டார்ட்அப் எக்ஸ்போ. ஜீ தமிழ் நியூஸ் இந்த நிகழ்வின் ஊடக பங்குதாரராக உள்ளது. தொழில் முனைவோர் பற்றிய முழுமையான புரிதலின் சூழலை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட பல நிகழ்வுகளை இது உள்ளடக்கியுள்ளது. சுமார் 15,000 பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படும் இந்த ஸ்டார்ட்அப் எக்ஸ்போ மிகப்பெரிய அளவிலான ஒரு தொழிநுட்ப கண்காட்சியாக தனித்துவம் பெற்றுள்ளது. இதில் பலவிதமான ஸ்டார்ட்அப்கள் இருக்கும். இவை அனைத்தும் அவற்றின் அதிநவீன தயாரிப்புகள் மற்றும் சேவைகள் பற்றிய விளக்கங்களை அவற்றின் ஸ்டால்களில் வழங்கும். இந்த ஸ்டார்ட்அப்கள் 1000 சாத்தியமான வாடிக்கையாளர்கள் மற்றும் 100 முதலீட்டாளர்களுடன் தொடர்பு கொள்ளும் வாய்ப்பைப் பெறும். பொருளாதார ரீதியாக ஸ்டார்ட்அப்களுக்கு உதவி செய்து ஊக்குவிக்கும் இன்குபேட்டர்கள் மற்றும் எனேப்ளர்களும் எக்ஸ்போவில் தங்கள் ஸ்டால்களை வைக்க வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.
ஏராளமான வாய்ப்புகள் மற்றும் வெளிப்பாடு
மாணவர்கள், முதலீட்டாளர்கள், இன்குபேட்டர்கள், அக்சலரேட்டர்கள், ஈ-சம்மிட் பங்கேற்பவர்கள், பேராசிரியர்கள் மற்றும் தொழிலதிபர்கள் ஆகியோரை உள்ளடக்கிய பலதரப்பட்ட பார்வையாளர்களுக்கு தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்த ஸ்டார்ட்அப்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். அதிக மக்கள் கூடும் பகுதிகளில் ஸ்டால்களை வைத்திருப்பதால் அதிகமானோர் இந்த ஸ்டால்களை பார்வையிடவும், இவர்களுடன் கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைக்கும். அந்தந்த தொழில்களில் முத்திரை பதிக்க விரும்பும் ஸ்டார்ட்அப்களுக்கு இந்த விரிவான வெளிப்பாடு விலைமதிப்பற்றதாக இருக்கும்.
முதலீட்டு வாய்ப்புகள்
இந்த நிகழ்வு, துணிகர முதலீட்டாளர்கள் மற்றும் நம்பிக்கைக்குரிய மற்றும் புதுமையான ஸ்டார்ட்அப்களில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்களுக்கு ஒரு ஹாட்ஸ்பாட் ஆக உள்ளது.
நிகழ்நேர சந்தை நுண்ணறிவு
சந்தையின் தேவைகள் மற்றும் விருப்பங்களை ஸ்டார்ட்அப்கள் பூர்த்தி செய்வதை உறுதிசெய்து, தயாரிப்புகள் மற்றும் உத்திகளைச் செம்மைப்படுத்துவதற்கு பங்கேற்பாளர்களின் கருத்துகள் முக்கியமானவை.
ஐஐடி மெட்ராஸ் செயல்முறை அமைப்பில் சேர வாய்ப்பு
ஸ்டார்ட்அப் எக்ஸ்போவில் பங்கேற்பது, ஸ்டார்ட்அப்களுக்கு ஐஐடி மெட்ராஸின் திறமை, புதுமுறைகாணல் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றில் தங்களையும் இணைத்துக்கொள்வதற்கான வாயில்களைத் திறக்கிறது.
தயாரிப்பு வெளியீட்டு தளம்
இந்த எக்ஸ்போ அறிவாற்றல் மிகுந்த பார்வையாளர்களின் முன்னிலையில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த ஒரு சிறந்த தளமாக செயல்படுகிறது. புதிய முயற்சிகளை வெளிப்படுத்தும் சிறந்த மேடையாகவும் இது திகழ்கிறது.
ஸ்டால் அடுக்குகளின் விவரங்கள்
இந்த எக்ஸ்போ பல்வேறு அடுக்கு ஸ்டால்களைக் கொண்டுள்ளது - வெள்ளி, தங்கம் மற்றும் பிளாட்டினம். ஒவ்வொன்றும் வெவ்வேறு அளவிலான டெலிவரிகள் மற்றும் விசிபிலிட்டி, அதாவது ஸ்டால்களின் அமைப்பு ஆகியவற்றை வழங்குகின்றன. இந்த விருப்பத்தேர்வுகள் ஸ்டார்ட்அப்கள் தங்கள் தேவைகள், பட்ஜெட் மற்றும் ஸ்டாலின் அளவு ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமான ஒரு ஸ்டாலைத் தேர்ந்தெடுக்க அனுமதிக்கின்றன. வெவ்வேறு அடுக்கு ஸ்டால்களுக்கான அனைத்து விலைகளும் குழுவால் கலந்தாலோசிக்கப்படும். ஸ்டால்கள் பற்றிய கூடுதல் தகவலுக்கு ஸ்டார்ட்அப் எக்ஸ்போ இணையதளத்தைப் பார்வையிடவும்.
பதிவு
இந்த நிகழ்வுக்கான பதிவுகள் ஏற்கனவே தொடங்கி முடிந்துவிட்டன. நீங்கள் பதிவு செய்தவுடன், பல்வேறு வகையான ஸ்டால்களுக்கான அனைத்து விவரங்கள் மற்றும் விலைகளைப் பற்றி விளக்க பிரதிநிதிகள் உங்களைத் தொடர்புகொள்வார்கள்.
தேதி: 8-10 மார்ச் 2024
நேரம்: காலை 10 மணி - மாலை 7 மணி
இடம்: ஐஐடி மெட்ராஸ் வளாகம்
பதிவு இணைப்பு: https://esummitiitm.org/events/startup-expo
தொடர்பு விவரங்கள்: +91 9740912277 ஷ்ரேயாஸ் கஞ்சர்லா | +91 9004048501 ஜஹான் ஷா
மேலும் படிக்க | இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் சேவை.. தொடக்கி வைத்தார் பிரதமர் மோடி
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ