மெட்டி என்பது திருமணமான இந்து சமயப் பெண்கள் தங்கள் கால் விரல்களில் அணியும் வளையம் போன்ற அணிகலன் ஆகும். இது பெரும்பாலும் வெள்ளியால் செய்யப்பட்டிருக்கும். பழங்காலத்தில் இது ஆணுக்குரிய அணிகலனாக இருந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருமணமான ஆணுக்கு மெட்டியும், பெண்ணுக்கு தாலியும் அடையாள அணிகலன்கள் ஆகும். ஒரு ஆண் திருமணமானவன் என்பதனை, அவனின் பாதங்களைப் பார்க்கும் பெண் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஆண்களின் கால்களில் மெட்டி (Toe Ring) அணிவிக்கப்பட்டது. காலமாற்றத்தினால் அல்லது கலாச்சார மாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது.


ALSO READ | திருமணத்திற்கு 3 நாட்களுக்கு முன் போலீஸ் ஸ்டேஷன் சென்ற மணமகள் .. காரணம் என்ன..!!


மெட்டி அணிதல் இந்தியாவின் சில பகுதிகளில் திருமணமான (Marriage) பெண்களுக்கு நிகழும் ஒரு முக்கியச் சடங்கு. உத்தர பிரதேசம் மற்றும் பீகார் போன்ற வட இந்திய மாநிலங்களில் திருமணமான பெண்கள் பொதுவாக பிச்சியா (bichiya) என்று அழைக்கப்படும் மெட்டிகளை அணிவர். தென்னிந்தியாவில் (South India) பெண்கள் தங்களது கால்விரல்களில் (முதல் மற்றும் கடைசி விரல்களைத் தவிர) மெட்டிகளை அணிகின்றனர். இந்தியப் பாரம்பரிய மருத்துவத்தில் மெட்டி அணிவது கருப்பை நரம்புடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.


மெட்டியின் உண்மையான மருத்துவ சிறப்புகள்!
பெண்களின் கருப்பை நரம்புகளுக்கும், கால் விரல் நரம்புகளுக்கும் ஒருவிதத் தொடர்பு உண்டு. கால் விரலில் மிஞ்சி அணிவதால் கருப்பையின் நீர் சமநிலை எப்போதும் பாதிப்படைவதில்லை. எனவே, பெண்கள் காலில் மெட்டி அணிவதால் கருப்பைப் பாதிப்பு ஏற்படும் வாய்ப்புகள் மிகவும் குறைவு. அந்த மெட்டியும் வெள்ளியில் செய்ததாக இருக்க வேண்டும்.


வெள்ளியில் இருக்கக்கூடிய ஒருவித காந்த சக்தி காலில் இருக்கும் நரம்புகளில் இருந்து உடலில் ஊடுருவி நோய்களில் இருந்து நிவாரணம் தரும் ஆற்றல் கொண்டது. 


பெண்களின் கர்ப்பக் காலத்தில் (Pregnancy) யக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். வெள்ளியிலான மெட்டி அணிந்து நடக்கும்போது இயற்கையாகவே அழுத்தி, உராய்ந்து வலியைக் குறைக்கிறது. மேலும், கூட்டுக் குடும்பமாக வசித்து வந்த அந்தக் காலத்தில், கால் மெட்டி ஒலியின் வைத்தே, தன் ஆசை மனைவி வருவதை உணர்ந்து காத்திருப்பாராம் கணவர். 


ALSO READ | திருமணத்தின் போது அக்னியை சுற்றி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?


புது மணத் தம்பதிகளின் அந்நியோன்யம் பெருகவும், கருப்பைப் பாதிப்புகளை முன்கூட்டியே தடுக்கவும், காலில் மெட்டி, கொலுசு போனவற்றை அணியும் பழக்கத்தை நம் முன்னோர்கள் உருவாக்கி இருக்கின்றனர் என்கிறார்கள் வல்லுநர்கள்.  


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR