திருமணத்தின் போது அக்னியை சுற்றி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா?

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

Last Updated : Nov 22, 2020, 07:07 AM IST
திருமணத்தின் போது அக்னியை சுற்றி வருவதற்கான காரணம் என்ன தெரியுமா? title=

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்? என்பதை தெரிந்து கொள்ளுங்கள்..!

"திருமணம் ஆயிரம் காலத்துப்பயிர்" என்ற பழமொழியை வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்லி நான் கேட்டிருப்போம். ஆம், உணமைதான் திருமணம் (wedding) என்பது ஒருவருக்கு ஒருவர் ஆதரவாகவும், ஆதாரமாகவும் அமையும் உறவே கணவன் மனைவி உறவு. ஒருவரை ஒருவர் தனக்குத்தான் பாத்தியம் என்று எண்ணுகின்ற உறவே தாம்பத்திய உறவு. உப்பையும், கசப்பையும், இனிப்பாக்க வல்லது இவ்வுறவு. புது புது உறவுகளை உருவாக்க கூடியது. 

அதுவும், இந்திய திருமணம் என்றாலே வண்ணமயமான கொண்டாட்டம் என்று கூறலாம். தற்போது உள்ள இளைஞர்கள் தங்களின் திருமணங்களை வித்தியாசமாக யோசித்து நடத்தி கொள்கின்றனர். எவ்வளவுதான் தங்களின் தலைமுறைக்கு ஏற்ப திருமணத்தை திட்டமிட்டு பிரமந்தாமாக நடத்தினாலும் நமது கலாசார சடங்குகளை ஒருபோதும் விட்டுக்கொடுப்பதில்லை. 

திருமணத்தின் போது அக்னியை சுற்றி ஏழு அடிகள் நடப்பதற்கு என்ன பொருள்?

சம்ஸ்கிருதத்தில் இதை'சப்தபதி'என்று கூறுவார்கள். அதாவது ஏழு அடிகள் மாப்பிள்ளையும் மணப்பெண்ணும் சேர்ந்து நடந்து வருவதாகும். அவ்வாறு ஏழு அடிகள் நடக்கும் போது மாப்பிள்ளை பெண்ணிடம் இறைவன் உனக்கு துணையிருப்பான் என்று கீழ்கண்டவாறு த*னது பிரார்த்தனையைச் சொல்கிறான்!

"முதல் அடியில்: பஞ்சமில்லாமல் வாழ வேண்டும்"

"இரண்டாம் அடியில்: ஆரொக்கியமாக வாழ வேண்டும்"

"மூன்றாம் அடியில்: நற்காரியங்கள் எப்பொழுதும் நடக்க வேண்டும்"

"நான்காவது அடியில்: சுகத்தையும் , செல்வத்தையும் அளிக்க வேண்டும்"

"ஐந்தாவது அடியில் : லக்ஷ்மி கடாக்ஷம் நிறைந்து பெற வேண்டும்"

"ஆறாவது அடியில்: நாட்டில் நல்ல பருவங்கள்நிலையாக தொடர வேண்டும்"

"ஏழாவது அடியில்: தர்மங்கள் நிலைக்க வேண்டும்"

ALSO READ | இந்தியாவின் இந்த மாநிலத்தில் திருமணத்திற்கு முன்பு குழந்தை பெறுவது சகஜம்..!

என்று பிராப்திப்பதாக சொல்லப்படுகிறது.இந்த சம்பிரதாயத்தில் மனிதர்களிடம் இருக்கும் மிகவும் சூக்ஷமமான மனோவியல்விசயத்தை இந்து தர்மத்தில் உணர்த்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள்.இரண்டு நபர்கள் ஒன்றாக ஏழு அடிகள் நடந்தால் அவர்களுக்குள் சினேகிதம்உண்டாகும் என்பது சாஸ்திரம்.உதாரணமாக நாம் சாலையில் நடக்கும் போது அறிமுகமில்லாத ஒருவரை கடக்கும் போது சில விநாடிகள் ஒன்றாய் நடக்க நேர்ந்தால் நன்றாக கவனியுங்கள். ஏழு அடிகள் நடப்பதற்குள் நாம் அவர்களை வேகமாக தாண்டிவிடுவோம் அல்லது அவர்களைமுன்னே போகவிட்டு விடுவோம்.

முழுமையாக ஏழு அடிகள் ஒன்றாக நடக்க மாட்டோம். இரண்டு மனிதர்கள் ஒன்றாக நடக்கும் போது அவர்களுக்குள் நடக்கும் மனோவியல் மாற்றங்கள் ஏழு அடிகளுக்குளாக நடந்து விடும் என்பது ஒரு சூக்ஷமமான விஷயம். இதை மிகவும் நுணுக்கமாக ஆரய்ந்து நம் இந்து தர்மத்தில்" அதை ஒரு சம்பிரதாயமாக வைத்திருப்பதை நாம் அனுபவித்து உணர வேண்டும். இந்து தர்மத்தில் எதுவும் மூடநம்பிக்கை இல்லை. பல நுணுக்கமான அறிவியல் மற்றும்மனோவியல்விஷயங்கள் நிறைந்தது இந்து தர்மம். இதை வாழ்ந்து தான் தெரிந்து கொள்ள வேண்டும்.

Trending News