2000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு அப்டேட்: உங்களிடம் இன்னுமும் 2000 ரூபாய் நோட்டுகள் உள்ளதா? ஆம் எனில், இந்தச் செய்தி உங்களுக்கு கட்டாயம் பயன்படும். 2,000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கான காலக்கெடு நெருங்கி வந்தாலும், இன்னுமும் 25,000 கோடி ரூபாய் நோட்டுகள் வங்கிகளுக்கு வரவில்லை. உண்மையில், தற்போது புழக்கத்தில் உள்ள 2000 ரூபாய் நோட்டுகள் திரும்பப் பெறப்படுவதாகவும், அதை வங்கியில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் அல்லது டெபாசிட் செய்து கொள்ளலாம் என மே மாதம் 19-ம் தேதி அறிவித்திருந்தது ரிசர்வ் வங்கி. அந்த வகையில் இந்த நோட்டுகளை டெபாசிட் செய்யவோ  அல்லது மாற்றவோ இன்னும் 4 நாட்கள் மட்டுமே உள்ளன. அந்த வகையில்  நீங்கள் உங்களிடம் இருக்கும் 2000 ரூபாய் (Rs 2000 Note Exchange Deadline Update) நோட்டுகளை இதுவரை வங்கியில் டெபாசிட் செய்யவில்லை என்றால் செப்டம்பர் 30ம் தேதிக்குள் இந்த வேலையை செய்து முடிக்கவும்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்னும் 4 நாட்களே உள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது:
இந்நிலையில், 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30 ஆம் தேதி ஆகும். அதற்குள் பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து டெபாசிட் செய்தோ அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. மேலும் தற்போது வரை 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் மாற்றிக் கொள்வதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி ஆகும். அதற்குள் பொதுமக்கள் தங்கள் கைவசம் வைத்திருக்கும் 2000 ரூபாய் நோட்டுகளை வங்கியில் கொடுத்து டெபாசிட் செய்தோ அல்லது வேறு ரூபாய் நோட்டுகளாகவோ மாற்றிக்கொள்ளும்படி ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், இந்த ஆண்டு மே 19 ஆம் தேதி வரை ரூ.3.56 லட்ச கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்தன. அதில் ரூ.3.32 லட்ச கோடி மதிப்புள்ள 2000 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரையில் வங்கிகளுக்கு திரும்பி வந்துள்ளன. அதேசமயம், இன்னுமும் 7 சதவீத நோட்டுகள் வங்கியில் டெபாசிட் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் படிக்க | ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு! இந்த வங்கியில் ரூ.50,000க்கு மேல் பணம் எடுக்க முடியாது!


நோட்டுகளை மாற்றுவதற்கு என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும்?
அரசின் வழிகாட்டுதலின்படி, 2000 ரூபாய் நோட்டுகளை மாற்றவோ அல்லது வங்கியில் டெபாசிட் செய்யவோ எந்த ஆவணமும் தேவையில்லை. வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் 20,000 ரூபாய் 10 நோட்டுகளை டெபாசிட் செய்யலாம். அதேசமயம், மற்ற மதிப்புகளில் மீதமுள்ள நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும், வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் 2,000 ரூபாய் நோட்டுகளை எவ்வளவு வேண்டுமானாலும் டெபாசிட் செய்யலாம்.


2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்யாவிட்டால் என்ன நடக்கும்?
ரிசர்வ் வங்கியின் கீழ் 2000 ரூபாய் நோட்டுகளை செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் இதைச் செய்யவில்லை என்றால், அது உங்களுக்கு ஒரு துண்டு காகிதத்திற்கு இடக்கவே கருதப்படும். எனவே, உங்களிடம் உள்ள 2,000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் உடனடியாக டெபாசிட் செய்துக்கொள்ளுங்கள்.


மேலும் படிக்க | உங்கள் வங்கி கணக்கில் இருந்த 295 ரூபாய் காணவில்லையா... இது உங்களுக்கான எச்சரிக்கை!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ