ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. திருத்தம் செய்வதற்கு முன் கவனம்!
Aadhaar Card Latest News: ஆதார் அட்டை புதுப்பித்துக்கொள்ள UIDAI என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற தகவல்களை பார்ப்போம். கடைசி தேதி டிசம்பர் 14.
Aadhaar Card News In Tamil: ஆதார் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ள கடைசி தேதியை டிசம்பர் 14 வரை UIDAI நீட்டித்துள்ளது. ஆதார் அட்டை வைத்திருக்கக்கூடியவர்கள், அதாவது குழந்தைகள், பெரியவர்கள், வயதானவர்கள் என யாராக இருந்தாலும் அனைவரும் ஆதார் அட்டையை அப்டேட் செய்ய வேண்டும். இது கடைசி வாய்ப்பாக கூட இருக்கலாம். உடனடியாக ஆதார் அட்டை அப்டேட் செய்துவிடுங்கள்.
நீங்கள் ஆதார் அட்டை வைத்திருப்பவராக இருந்தால், உங்கள் ஆதார் அட்டையைப் புதுப்பிக்க விரும்பினால், சில விஷயங்களை அறிந்து கொள்வது முக்கியம். ஆதார் அட்டை அப்டேட் தொடர்பான UIDAI என்னென்ன சொல்லி இருக்கிறார்கள் என்ற தகவல்களை பார்ப்போம்.
தற்போதைய ஆவணங்களைப் பதிவேற்றுவதற்கான கடைசி தேதி டிசம்பர் 14 வரை நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதாவது ஆதார் கார்டு அப்டேட் தொடர்பான ஆவணங்களை இந்த காலக்கெடுவுக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
அடையாளச் சான்று, முகவரிச் சான்று, மொபைல் எண் உள்ளிட்ட தகவல்களை டிசம்பர் 14 ஆம் தேதிக்குள், தேவையான ஆவணங்களை வழங்கி புதுப்பித்துக்கொள்ளுங்கள். ஆதார் அட்டை முக்கியமான அடையாள சான்று என்பதால் அதில் உள்ள தகவல்களை புதுப்பித்து வைப்பது மிகவும் முக்கியம்.
தற்போது ஆதார் அட்டையில் பெயர் மாற்றம் செய்ய விரும்பினால் அரசிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. பிறந்த தேதியில் திருத்தம் செய்ய, அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் சென்று மாற்றிக்கொள்ளலாம். இந்த மாற்றத்தை ஆன்லைனில் செய்ய முடியாது.
ஆதார் அட்டையில் உள்ள முகவரி தவறாகவோ அல்லது வேறு முகவரி இருந்தால் நீங்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். மேலும் ஆதாரில் உங்கள் விவரங்கள் சரியாக இல்லாவிட்டால், பல சிக்கல்களை சந்திக்க நேரிடலாம்.
10 ஆண்டுகளுக்கு பழமையான ஆதார் அட்டையை புதுப்பிக்க இப்போது எந்த கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை. இதற்கான காலக்கெடு செப்டம்பர் 14 ஆம் தேதியே முடிவடைந்துவிட்டது. ஆனால் மீண்டும் டிசம்பர் 14 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
ஆதார் அட்டையை அப்டேட் செய்ய இரண்டு விருப்பங்கள் உள்ளன. ஒன்று 'மை ஆதார் போர்ட்டல்' மூலம் அப்டேட் செய்யலாம் அல்லது ஆதார் சேவை மையத்திற்கு நேரடியாக சென்று அப்டேட் செய்யலாம்.
ஆதார் கார்டு வைத்திருப்பவர்கள் பொது சேவை மையத்திற்கு சென்று பெயர், புகைப்படம், மொபைல் நம்பர் மற்றும் முகவரி போன்ற விவரங்களை புதுப்பிக்கலாம். ஆனால் அதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய தற்போது கட்டணம் இலவசம்.
ஆதார் அட்டையை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளைத் தடுக்க, குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை ஆதார் அட்டையை அப்டேட் செய்வது கட்டாயம். அதன்மூலம் ஆதார் அட்டை பாதுகாப்பாகவும் இருக்கும், மோசடிகளையும் தடுக்க முடியும்.
மேலும் படிக்க - Aadhaar Card: ஆதார் அட்டையில் இத்தனை வகைகளா... உங்களுக்கு ஏற்றது எது..
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ