ஆதார் – பான் இணைப்பதற்கான கடைசி தேதி செப்டம்பர் 30ஆம் தேதி என்ற காலக்கெடு விதிக்கப்பட்ட நிலையில், இப்போது மத்திய அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா பரவல் (Corona Virus) காரணமாக ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை கருத்தில் கொண்டு, முன்னதாக பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில், தற்போது, 2022 மார்ச் 30ஆம் தேதி வரை மீண்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


பான் எண்ணை ஆதார் எண்ணுடன் (PAN - Aadhaar Link) உரிய நேரத்தில் இணைக்காதவர்கள், 10,000 ரூபாய் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும் என முன்னதாக றிவிக்கப்பட்டிருந்த நிலையில், புதிய அறிவிப்பு பலருக்கு நிம்மதி அளிக்கக் கூடும். இதன்படி, 2022, மார்ச் 31ம் தேதிக்குள் பான்-ஆதார் இணைக்காதவர்களுக்கு அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கலாம்.


ALSO READ | ஆதார் எண்ணை விருப்பப்படி தேர்வு செய்ய முடியுமா.. UIDAI கூறுவது என்ன..!!!


பான் எண்ணை ஆதார் உடன் இணைக்கும் முறை:


1. உங்கள் பான் கார்டை ஆதார் உடன் இணைக்க, நீங்கள் முதலில் www.incometaxindiaefiling.gov.in என்ற இணையதளத்திற்கு செல்ல வேண்டும்.
2. இந்த இணையதளத்தில் நீங்கள் 'Link Aadhaar' என்ற ஆப்ஷனைக் காண்பீர்கள்.
3. இந்த இணைப்பைக் கிளிக் செய்தால், ஒரு புதிய விண்டோ திறக்கும்
4. இங்கே நீங்கள் உங்கள் ஆதார் எண், பான் கார்டு எண் மற்றும் உங்கள் தனிப்பட்ட தகவல்களை நிரப்ப வேண்டும்.
5. இதற்குப் பிறகு, நீங்கள் 'Submit' பொத்தானைக் கிளிக் செய்தவுடன் உங்கள் பான் கார்டு உங்கள் ஆதார் உடன் இணைக்கப்படும்.


2022, மார்ச் 31-க்குள் உங்கள் பான் கார்டுடன் ஆதார் அட்டையை இணைக்க முடியாவிட்டால், நீங்கள் பான் கார்டை மேலும் பயன்படுத்த முடியாது. உங்கள் PAN கார்டு மார்ச் 31, 2022 க்கு பிறகு செல்லாததாகி விடும். இதற்குப் பிறகு, உங்களால் வங்கிக் கணக்கை கூட திறக்க முடியாது. எந்த அரசாங்கத் திட்டத்தையும் பயன்படுத்திக் கொள்ள முடியாது. மேலும், நீங்கள் எந்த விதமான அரசு உதவித்தொகையின் பலனையும் பெற முடியாது. மேலும், செல்லாத பான் கார்டு பயன்படுத்தினால், அது வருமான வரி சட்டத்தின் கீழ் பிரிவு 272B விதியின் மீறலாக கருதப்படும். இத்தகைய சூழ்நிலையில், செல்லாத பான் கார்ட் வைத்திருப்பவர் மீது ரூ 10,000 அபராதம் விதிக்கபடும்.


ALSO READ | அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR