அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!

ரயில்வே அமைச்சராக இருந்த பியூஷ் கோயல், 2019 ஆம் ஆண்டில்,  நான்கரை ஆண்டுகளில் ரயில்களில் Wi-Fi இணைப்பு வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். 

Written by - ZEE Bureau | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 5, 2021, 11:19 AM IST
  • ரயில்வே பயணிகளுக்கு அதிர்ச்சி செய்தி
  • இப்போது நீங்கள் அதிகம் விரும்பும் இந்தப் முக்கிய வசதி பயணத்தின் போது கிடைக்காது.
  • மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தகவல்.
அதிர்ச்சித் தகவல்! ரயில் பயணிகளுக்கு 'இந்த’ சேவை கிடைக்காது; காரணம் என்ன..!!

Indian Railways Latest News: ரயிலில் பயணம் செய்பவர்களுக்கு முக்கியமான செய்தி உள்ளது. இப்போது பயணத்தின் போது நீங்கள் மிகவும் விரும்பும் ஒரு சிறப்பு வசதி கிடைக்காது. மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக பயணிகளின் வசதிக்காக ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் Wi-Fi வழங்கி வருகிறது. ஆனால், நாட்டின் அனைத்து ரயில் நிலையங்களிலும் வைஃபை இணைப்பை வழங்கிய பிறகு, அரசாங்கம் இந்த திட்டத்தை கைவிட்டது.

2019 ஆம் ஆண்டில், முன்னாள் ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல், நான்கரை ஆண்டுகளில் ரயில்களுக்குள் Wi-Fi வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக அறிவித்தார். ஆனால் இதில் பல சவால்கள் இருந்தன. இதன் காரணமாக அது இப்போது ரயில்வே இந்த திட்டத்தை கை விட்டது.

ALSO READ | Indian Railways: இப்போது ‘வேறு ஒருவரும்’ உங்கள் டிக்கெட்டில் பயணம் செய்யலாம்..!!

பயணிகளுக்கு வைஃபை சேவை கிடைக்காது
இப்போது இந்த திட்டம் இந்திய ரயில்வேயால் கைவிடப்பட்டது. இதனை குறைந்த செலவில் வழங்க முடியாத காரணத்தினால், ரயில்களில் Wi-Fi இணைப்பை வழங்கும் திட்டத்தை ரயில்வே நிறுத்தி வைத்துள்ளது. இதை நாடாளுமன்றத்தில் அரசு உறுதி செய்தது. ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், மக்களவையில் ஒரு கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், இலவச வைபை சேவை வாங்குவதற்கான முன்னோடி திட்டத்தின் கீழ், ஹவுரா ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயிலில் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு தொழில்நுட்பம் மூலம் அரசு வைஃபை இணைய வசதியை வழங்கியது.

முன்னோடித் திட்டத்தின் போது, ​​தொழில்நுட்பம் நிறைந்த மூலதனம் மற்றும் தொடர்ச்சியான செலவுகள், அலைவரிசை கட்டணங்கள் ஆகியவற்றின் காரணமாக் அதிக செலவு ஏற்பட்டுள்ளது. மேலும், ரயிலில் பயணிகளுக்கு வழங்கப்பட்ட இணைய அலைவரிசை அளவும் போதுமானதாக இல்லை. ரயில்களில் வைஃபை (Wi-Fi ) இணைய சேவைகளுக்கு பொருத்தமான, செலவு குறைந்த வகையிலான தொழில்நுட்பம் இப்போது இல்லை என்று ரயில்வே அமைச்சர் கூறினார்.

இதை அடுத்து ரயில்வே பயணிகளுக்கான  இலவச வைஃபை திட்டம் கைவிடப்பட்டுள்ளது. 

ALSO READ | Indian Railways: இலவச WiFi மூலம் ‘அந்த’ வலைத்தளங்களை பார்த்தால் இனி கடுமையான நடவடிக்கை!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

More Stories

Trending News