உடன் வேலை பார்ப்பவரை காதலிப்பதால் ஏற்படும் 5 பிரச்சனைகள்!
Reasons Why You Should Not Date A Co Worker : நம்மில் பலர், நம்முடன் வேலை பார்ப்பவர்கள் மீது ஈர்ப்பு கொண்டிருப்போம், காதலிப்போம். ஆனால், இதனால் என்ன மாதிரியான பிரச்சனைகள் எழும் என்பது தெரியுமா?
Reasons Why You Should Not Date A Co Worker : நம்மில் பலர், இப்போது புதிதாக வேலைக்கு சென்றவர்களாக இருப்போம், அல்லது சில ஆண்டுகளாகவே வேலை செய்தவர்களாக இருப்போம். இதுவரை வேலை பார்த்த ஏதேனும் ஒரு அலுவலகத்தில், உடன் பணிபுரிபவர்கள் மீது ஈர்ப்பு வந்திருக்கும். அந்த ஈர்ப்பு காதலாகவும் முடிந்திருக்கலாம், கசப்பாகவும் முடிந்திருக்கலாம். இதில் அனுபவப்பட்டவர்களுக்கு, உடன் பணிபுரிபவர்கள் மீது அது போன்ற உணர்வு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பது தெரியும். ஆனால் அடிபடாதவர்கள் இது குறித்த குழப்பத்தில் சுற்றிக்கொண்டிருப்பர். அவர்கள், உடன் வேலை பார்ப்பவர்களை டேட்டிங் செய்தால், என்னென்ன விளைவுகள் வரும் என தெரிந்துக்கொள்ள வேண்டும்.
மோதல்கள்:
அலுவலகத்தில் இருவர் காதலிக்கின்றனர் என்றால், அந்த உறவில் இருக்கும் இருவரில் ஒருவர் அதிகாரம் பொருந்தியவராக இருப்பார். இதனால், காதலிலும், அவர்கள் பார்க்கும் வேலை ஆகிய இரண்டிலுமே பிரச்சனை வரலாம். அது மட்டுமல்ல, அந்த அதிகாரத்தில் இருப்பவர் தான் காதலிக்கும் ஆளுக்கு ஆதரவு கொடுப்பதாக சில பிரச்சனைகள் கூட அலுவலகத்தில் எழலாம். உங்களால் அலுவலகத்தில் சிலருக்கு பிரச்சனை எழுவது மட்டுமன்றி, உங்களுக்குள்ளும் தீர்க்க முடியாத அளவிற்கு பிரச்சனை ஏற்படலாம்.
கிசுகிசு பேசுவர்:
உங்களுடன் வேலை பார்ப்பவரை காதலிப்பதால், உங்களை பற்றி கிசுகிசு பரவலாம். இதனால், நீங்கள் இருக்கும் சில சூழ்நிலைகள் உங்களை சங்கடத்திற்குள்ளாக்கலாம். தேவையற்ற சிலர் உங்களுக்கு கவனம் கொடுக்க ஆரம்பிப்பர். இதனால், உங்களுக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்படலாம். இது, உங்களுக்கு மேல் வேலை பார்ப்பவர்களுக்கு தெரிய வரும் போது, உங்களுக்கு சம்பள உயர்வு அல்லது ப்ரமோஷன் தராமல் இருப்பதற்கு இதை ஒரு காரணமாக கூட எடுத்துக்கொள்வர்.
கவனச்சிதறல்:
வேலை பார்க்கும் இடத்தில், ஏற்கனவே பல இடைஞ்சல்கள் இருக்கும். இதனால், நாம் செய்ய நினைக்கும் வேலைகளை சரியான சமயத்தில் செய்ய முடியாமல் போகலாம். அதிலும் ஒரு அலுவலகத்தில் இருக்கும் இருவர் காதலிப்பதால் என்னென்ன நேரும்? காதல் உணர்வுகள் உங்கள் கவனத்தை சிதைக்க நேரும். இதனால், வேலை தடைபடலாம். கவனச்சிதறலும் ஏற்படலாம். உங்கள் வேலை திறன் குறைந்து, ஈடுபாடுடன் வேலை செய்ய முடியாத நிலை ஏற்படலாம்.
மேலும் படிக்க | உயிரை பறிக்கும் டாக்ஸிக் வேலை கலாச்சாரம்! இதிலிருந்து தப்பிப்பது எப்படி?
வேலை மீதான தாக்கம்:
ஒரே அலுவலகத்தில் காதலிக்கும் இருவரும் பிரேக்-அப் செய்து விட்டால், அது இருவரின் தனிப்பட்ட மற்றும் வேலை வாழ்க்கையையும் பாதிக்கும். அவர்கள், அலுவலகத்தில் அடிக்கடி பார்த்துக்கொள்ளும், பேசிக்கொள்ளும் வாய்ப்பு கிடைக்கலாம். இது, மன ரீதியான அல்லது வேலை தொடர்பான பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கலாம். அது மட்டுமன்றி, வேலை பார்க்கும் இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற விதம் இருக்கிறது. அதை சிலர் பிரிந்த பின்பு பின்பற்றாமல் பாேகலாம்.
ஒரு சார்பாக இருப்பது:
உங்களுடன் வேலை பார்ப்பவர்கள், நீங்கள் இருவரும் காதலிக்கிறீர்கள் என்பதற்காக இருவரும் எந்த விஷயம் நடந்தாலும் ஒருவருக்கொருவர் ஆதரவு கொடுப்பதாக நினைத்துக்கொள்வர். ஒரு பிரச்சனை வரும் போது, அதில் உங்கள் மீது தவறே இல்லாமல் உங்கள் காதலர்/காதலி உங்களுக்கு சப்போர்ட் செய்தாலும், உங்கள் காதலால் favoritism நடப்பதாக பேச்சு எழும்.
மேலும் படிக்க | அலுவலக அரசியலை கையாள்வது எப்படி? ஈசியான 5 வழிகள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ