முதல் முறையாக அமெரிக்காவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக டிரோன் மூலம் சிறுநீரகம் கொண்டு செல்லப்பட்டுள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த 8 ஆண்டுகளாக அமெரிக்காவின் வாஷிங்டனில் சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்த 44 வயது பெண்மணிக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் முடிவு செய்தனர்.


இந்நிலையில் அமெரிக்க நிறுவனம் ஒன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளுக்காக உறுப்புகளை கொண்டு சேர்க்கும் வகையில் டிரோன் சேவையை தொடங்கியுள்ளது. இந்த டிரோன் முதல் முறையாக 5 கிலோ மீட்டர் தூரம் பயணித்து அந்த பெண்மணிக்காக சிறுநீரகத்தை சுமந்து சென்றுள்ளது.