ஜனவரி 14 முதல் வக்கிரமாகும் புதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிக பிரச்சனை
ஆண்டில் மூன்று அல்லது நான்கு முறை புதன் வக்கிரமடைவார். அந்த வகையில் இந்தாண்டு புதன் வக்கிரம் அடையும் நாள் ஜனவரி 14 ஆகும்.
புதுடெல்லி: ஜோதிடத்தில் கிரகப் பெயர்ச்சி எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறதோ, அதே போல கிரக வக்கிர பெயர்ச்சி முக்கியத்துவமாகப் பார்க்கப்படுகிறது. குரு, சனி, சுக்கிரன், செவ்வாய் புதன் ஆகிய கிரகங்கள் வக்கிரம் பெயர்ச்சி அடையக்கூடிய கிரகங்கள்.
அந்த வகையில் 2022ல் புதன் பகவான் ஜனவரி 14 ஆம் தேதி வக்கிரம் அடையப்போகிறது. பொதுவாக புதன் பகவான் ஒரு ஆண்டில் மூன்று அல்லது நான்கு முறை வக்கிரமடைவார். எந்த ராசியில் புதன் வக்கிரம் அடைகிறாரோ அதைப் பொருத்து ஒவ்வொரு ராசிக்கும் பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. அதன்படி இந்த புதன் வக்கிரம் 4 ராசிக்காரர்களின் (Zodiac Sign) வாழ்க்கையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
ALSO READ | ஷ்ஷ்.. இந்த ராசிக்காரங்ககிட்ட எப்பவும் உங்க ரகசியத்த சொல்லாதீங்க: டண்டோரா போட்டுடுவாங்க
மேஷம்: புதன் வக்கிரம் மேஷ ராசியினருக்கு வேலைப்பளுவையும், மன அழுத்தத்தையும் அதிகரிக்கும். இதன் காரணமாக, மேலதிகாரி அல்லது சக ஊழியர்களுடன் விரிசல் ஏற்படலாம். திருமண வாழ்க்கையிலும் விரிசல் ஏற்படலாம்.
ரிஷபம்: ரிஷபம் ராசிக்காரர்களுக்கு இந்தக் காலத்தில் அதிர்ஷ்டத்தின் ஆதரவு கிடைக்காது. புதிதாக எதையும் செய்ய வேண்டாம். உங்கள் தந்தையிடம் கவனமாகப் பேசுங்கள். பொறுமையாக இருங்கள், காலம் நிச்சயம் மாறும்.
கன்னி: கன்னி (Virgo) ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினைகள் ஏற்படும். குடும்பத்தில் யாருடனும் வாக்குவாததில் ஈடுபட வேண்டாம், குறிப்பாக வாழ்க்கை துணையுடன் வாக்குவாதம் செய்ய வேண்டாம். முதலீடு செய்ய வேண்டாம்.
விருச்சிகம்: விருச்சிக ராசிக்காரர்கள் கால ஓட்டத்துடன் ஓட வேண்டும். பயணம் செய்வதை தவிர்க்கவும். முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். குடும்பத்தில் யாருக்காவது உடல்நலக் குறைபாடு இருந்தால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.
ALSO READ | பொங்கல் முதல் இந்த 4 ராசிகளுக்கு பொங்கும் எதிர்காலம்! இந்த ராசிக்காரருக்கு அரசு வேலை
(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளவை. ஜீ மீடியா இவற்றை உறுதிப்படுத்தவில்லை.)
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews மற்றும் டிவிட்டரில் @ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR