தொப்பையை குறைக்க வேண்டுமா? ‘இந்த’ 5 உணவுகளை எடுத்துக்கொள்ளுங்கள்!
Tips To Loose Weight: பலரும் தொப்பையை குறைக்க முடியாமல் சிரமப்படுவர். அப்படி சிரமப்படுபவர்களுக்கு ஈசியான டிப்ஸ் இதோ.
உடல் எடையை குறைப்பது என்பது பலருக்கு மிகவும் சிரமமான காரியமாக தோன்றும். இதற்காக பல முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும். ஒரு சிலருக்கு அந்த முயற்சிகள் யாவும் பயணளிக்காதது போல தோன்றும். இவர்கள், தங்களது தினசரி உணவிலேயே சில மாற்றங்களை செய்து, சில பொருட்களை சேர்த்துக்கொண்டால் கண்டிப்பாக உடல் எடையை கட்டுக்கேப்பில் வைத்து, தொப்பையை குறைக்கலாம். அவை என்னென்ன மாற்றங்கள்? உணவு முறையில் எது போன்ற மாற்றங்களை கொண்டு வர வேண்டும்? இங்கு பார்ப்போம்.
எடை இழப்பிற்கு உதவும் மசாலா பொருட்கள்:
உங்கள் உணவில் பாரம்பரிய இந்திய மசாலாப் பொருள்களைச் சேர்ப்பது, உங்கள் உணவில் சுவையை கூட்டுவதோடு உடல் எடையைக் குறைக்கவும் உதவும். அது மட்டுமன்றி பல ஆரோக்கிய நன்மைகளையும் இந்த மசாலா பொருட்கள் கொண்டுள்ளது. தொப்பை கொழுப்பைக் குறைக்கும் திறனுக்காக நன்கு அறியப்பட்ட ஐந்து இந்திய மசாலாப் பொருட்களின் சக்திவாய்ந்த குணங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
சீரகம்:
சீரகம், செரிமானம் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை போக்க உதவுகிறது. இதை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வதால் மெட்டபாலிச சத்து அடிகரிக்கவும், கனமான உணவுகள் கூட எளிதில் ஜீரணம் ஆகவும் உதவுகிறது. இதை தினசரி உணவில் சேர்த்து வந்தால் கொழுப்பை எரித்து வயிற்று தொப்பையை கரைக்க உதவுகிறது.
மேலும் படிக்க | தலைமுடிக்கு எண்ணெய் தடவுகிறீர்களா? இந்த தவறுகளை மட்டும் செய்யாதீங்க!
மஞ்சள்:
மஞ்சளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிகம் உள்ளது என அனைவருக்கும் தெரியும். அது மட்டுமன்றி இதில் இருக்கும் ஆண்டி ஆக்சிடண்ட்ஸ் பண்புகள் வயிற்று புண்களை ஆற்றும் என மருத்துவர்களால் கூறப்படுகிறது. மேலும், வயிறு வீக்கத்தை கட்டுப்படுத்த்குதல், ரத்த சர்க்கரயளவை கட்டுப்படுத்துதல் போன்றவற்றிற்கும் மஞ்சள் உதவுகிறது. இதனால் உடல் எடையையும் நம்மால் குறைக்க முடியும் என பயன்பெற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.
கருமிளகு:
கருமிளகில் பைப்ரின் என்ற மருத்துவ குணம் நிறைந்த மூலிகை உள்ளது. இது, உடல் எடையை அதிகரிக்கும் செல்களை வளர விடாமல் தடுக்கும் என கூறப்படுகிறது. கருப்பு மிளகு, உணவில் நல்ல காரத்தை சேர்ப்பது மட்டுமன்றி உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுக்கிறது.
இலவங்கப்பட்டை:
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும் சக்திவாய்ந்த மசாலாப் உணவு பொருட்களில் ஒன்று இலவங்கப்பட்டை. இதில் உள்ள நற்பண்புகள் உடலில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தடுக்கிறது. இது கூடுதல் கொழுப்பு சேராமலும் பார்த்துக்கொள்கிறது. குறிப்பாக வயிற்றுப் பகுதியில் சேரும் கொழுப்புகளை விரைந்து அகற்றுகிறது. இதன் இனிப்புச் சுவையானது சர்க்கரைக்காக இருக்கும் க்ரேவிங்க்ஸை தணித்து ஒட்டுமொத்த எடையைக் கட்டுப்படுத்தவும் உதவும்.
இஞ்சி:
இஞ்சியில் உள்ள தெர்மோஜினிக் சத்து, உடல் வெப்பநிலையை உயர்த்துவதற்கும் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவுகிறது. இதன் விளைவாக, இது உள்ளுறுப்பு கொழுப்பைக் குறைப்பதற்கும் கலோரிகளை எரிப்பதற்கும் உதவுகிறது. இஞ்சி சாப்பிட்டால் செரிமானம் எளிதாகும். இது குடல் வீக்கத்தை குறைத்து வயிற்றை தட்டையாக்கும்.
மேலும் படிக்க | ஆரஞ்சு தோலை தேய்த்தால் சருமம் பளபளக்குமா? பதிலை தெரிந்து கொள்வோம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ