தினசரி உணவில் இந்த சட்னிகளை சேர்த்துக்கொள்ளுங்கள் - ஆரோக்கியம் உறுதி
காலையில் தொட்டுக்கொள்ளும் சட்னி உடல்நலத்துக்கு மிகப்பெரும் ஆரோக்கியத்தை கொடுக்கிறது.
உணவுகளில் பலருக்கு பல விருப்பம் இருந்தாலும் அந்த பலரும் தங்களது உணவுகளில் விருப்ப பட்டியலில் சட்னிக்கு இடம் உண்டு. எந்தவொரு காலை உணவை எடுத்துக்கொண்டாலும் அதை சட்னி இல்லாமல் சாப்பிட முடியாது. உணவுக்கு சுவை கூட்டுவது மட்டுமில்லாமல் சட்னியில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன.ம். இந்த பதிவில் நீங்கள் உண்ண கூடிய சத்து நிறைந்த சட்னிகள் பற்றி பார்க்கலாம்.
புதினா சட்னி:
புதினா சட்னி செரிமான பிரச்சனைகளுக்கு உதவுகிறது. மேலும் இது பசியை அதிகரித்து, குமட்டலை போக்க வழி செய்கிறது. இந்த சட்னியை தயாரிக்க 100 கிராம் புதினா இலைகள், 1 கப் பொடியாக நறுக்கிய வெங்காயம், 1 டீஸ்பூன் வறுத்த சீரகம், சிறிது உப்பு, 2 டீஸ்பூன் நறுக்கிய பச்சை மிளகாய், 1 டீஸ்பூன் சர்க்கரை ஆகியவற்றை சேர்த்து அரைத்து கொள்ளுங்கள்.
தக்காளி சட்னி:
தக்காளியில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இது ஆன்ட்டி-வைரஸ் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இந்த சட்னியை தயாரிக்க, எண்ணெயை சூடாக்கி 1 டீஸ்பூன் கடுகு சேர்க்கவும். பிறகு அதில் சிறிது நறுக்கிய கறிவேப்பிலை சேர்த்து லேசாக வறுக்கவும். அடுத்து நறுக்கிய பூண்டை சேர்த்து வாசனை வரும் வரை வறுக்கவும். பிறகு 250 கிராம் பொடியாக நறுக்கிய தக்காளியைச் சேர்த்து வதக்கவும். அடுத்து 1 டீஸ்பூன் சிவப்பு மிளகாய் தூள், சுவைக்கு உப்பு சேர்த்து எல்லாவற்றையும் நன்றாக கலக்கவும்.
புளி சட்னி:
புளி சட்னி அனைத்து வயது பிரிவினருக்கும் மிகவும் பிடிக்கும். இது வயிற்றில் ஏற்படும் அசௌகரியத்தை போக்கவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. இதை தயாரிக்க 1 கப் புளியை ஒரு பாத்திரத்தில் தண்ணீர் நிரம்பி இரவு முழுவதும் ஊற வைத்து ஒரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கலாம்.
மேலும் படிக்க | இரும்புச்சத்து குறைபாடா? இந்த உணவுகளை காலையில் சாப்பிடுங்கள்
பிறகு மற்றொரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் மற்றும் 1/2 கப் நறுக்கிய வெல்லம் சேர்த்து கொள்ளவும். இதை தொடர்ந்து கிளறி, 3 நிமிடங்கள் வரை கிளறி விடவும். அடுத்து, 1/2 டீஸ்பூன் சீரகத்தூள், 1/2 டீஸ்பூன் இஞ்சி தூள், சிறிது உப்பு மற்றும் 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள் சேர்த்து கெட்டியாக ஆகும்வரை 5 நிமிடங்களில் கொதிக்க விட்டு பரிமாறுங்கள்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ