புதுடில்லி: சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் பயணம் மூன்று மாதங்களில் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 நாடுகளுக்கு மேல் பரவியுள்ளது. இந்த தொற்று நோய்க்கு மருந்து இதுவரை தடுப்பூசி கண்டு பிடிக்கப்படாததால், உலக நாடுகள் என்ன செய்வதென்று தெரியாமல், மக்களை கட்டுப்பாட்டுடன் இருக்குமாறு அறிவிறுத்தப்பட்டு உள்ளன. உலகம் முழுவதும் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. இதனால் பல நிறுவனங்கள் முடங்கி உள்ளது. மக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றும் கூறப்பட்டு உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஒருபக்கம் கொரோனா, மறுபக்கம் ஊரடங்கு உத்தரவு, இந்த இரண்டுக்கும் மத்தியில் மக்களின் வாழ்வாதாரம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி, கனடா உட்பட உலகின் பல நாடுகளில், நிறுவனங்கள் தங்கள் நிறுவன ஊழியர்களை வேலையிலிருந்து வெளியேற்றுகின்றன. நோய்த்தொற்றைத் தடுக்க உலகின் பல்வேறு நாடுகளில் விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக மக்கள் தங்கள் வேலைகலை  இழந்து வருகின்றன.


இந்தியாவில் ஒழுங்கமைக்கப்படாத துறையில் பணிபுரியும் சுமார் 400 மில்லியன் மக்கள், அதிகரித்து வரும் கொரோனா தாக்கம் மற்றும் அதைச் சமாளிக்க 21 நாள் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு ஆகியவற்றால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமில்லாமல், மேலும் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதால், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பதிக்கபப்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அவர்களின் வேலைகள் மற்றும் வருவாயைப் பாதிக்கலாம். சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ஐ.எல்.ஓ) அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் அமைப்புசாரா துறையில் பணிபுரியும் 400 மில்லியன் மக்களை மேலும் வறுமையில் தள்ளும்  எனக் கூறியுள்ளது. 


அமெரிக்க தொழிலாளர் பணியகம் வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின் படி, இதுவரை 1.68 கோடி மக்கள் வேலையின்மை காரணமாக அரசாங்கத்திடம் வேலை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். இது வெறும் 3 வார எண்ணிக்கை மட்டுமே. அதேபோல கனடா மற்றும் ஜெர்மனியிலும் வேலையின்மை அதிகரித்துள்ளது.


கொரோனா தொற்று காரணமாக, கனடாவில் சுமார் 1 மில்லியன் மக்கள் வேலை இழந்துவிட்டார்கள் என்பதை நான் உங்களுக்கு சொல்கிறேன். கனடா தொழிலாளர் படை கணக்கெடுப்பின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோயால் மார்ச் மாதத்தில் 1 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வேலை இழந்துள்ளனர். இதன் மூலம், கனடாவில் வேலையின்மை விகிதம் மார்ச் மாதத்தில் 2.2 சதவீதத்திலிருந்து 7.8 சதவீதமாக பல மடங்கு அதிகரித்துள்ளது.


ஜெர்மனி கொரோனா நோய்த்தொற்றை எதிர்கொள்ளும் நிலையில், இந்த ஆண்டு வேலையின்மை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்க புள்ளி விவரங்களின்படி, இதுவரை 6.5 லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் வேலை நேரத்தைக் குறைக்க விண்ணப்பித்துள்ளனர். செய்தி நிறுவனமான ஏ.எஃப்.பி படி, இந்த நிலைமை 2008-09 மந்தநிலையை விட பயங்கரமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.