இந்தியா ஜூலை 25-க்குள் 100 சதவீதம் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதா நாடாக மாறும் என சிங்கப்பூர் பல்கலைக்கழக அறிக்கை தெரிவித்துள்ளது!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் ஒரு அறிக்கையில், ஜூலை 25, 2020-க்குள் இந்தியா 100 சதவீதம் கொரோனா வைரஸ் இல்லா நாடாக இருக்கும் என்று கூறியுள்ளது.  அதாவது, செயற்கை நுண்ணறிவு-உந்துதல் தரவு பகுப்பாய்வு முறையால், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் இந்தியாவில் இருந்து மே 22-க்குள், ஜூன் 1-க்குள் 99 சதவீதமும், ஜூலை 25 ஆம் தேதிக்குள் நாடு 100 சதவீதமும் கொரோனா வைரஸிலிருந்து விடுபடும்.


கொரோனா வைரஸ் தோற்றால் பெரும் அழிவை சந்தித்த அமெரிக்கா, பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் கொரோனா வைரஸிலிருந்து எப்போது விடுபடும் என்று அந்த அறிக்கை கணித்துள்ளது. சிங்கப்பூர் தொழில்நுட்ப மற்றும் வடிவமைப்பு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, ஆகஸ்ட் 27-க்குள் அமெரிக்கா கொரோனா வைரஸிலிருந்து விடுபடும், அதே நேரத்தில் 2020 டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் வைரஸ் உலகிலிருந்து முற்றிலுமாக அழிக்கப்படும்.


சிங்கப்பூர் பல்கலைக்கழக அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பாதிப்புகளில் 97 சதவீதம் மே 30-க்குள் முடிவடையும், ஜூன் 17-க்குள் 99 சதவீதமும், 2020 டிசம்பர் 9 ஆம் தேதிக்குள் 100 சதவீதமும் முடிவடையும்.


பிரான்சில், 97 சதவீத கொரோனா வைரஸ் பாதிப்புகள் மே 6-க்குள் முடிவடையும், மே 18-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 5 ஆம் தேதிக்குள் 100 சதவீதமும் முடிவடையும். இத்தாலியில், மே 8 க்குள் 97 சதவீதமும், மே 21-க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 25 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.


இதற்கிடையில், மே 4 ஆம் தேதிக்குள் ஸ்பெயினில் கொரோனா வைரஸ் வழக்குகளில் 97 சதவீதமும், மே 16 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்குள் 100 சதவீதமும் சரிவைக் காணலாம். இங்கிலாந்தில், மே 16-க்குள் 97 சதவீதமும், மே 27 க்குள் 99 சதவீதமும், ஆகஸ்ட் 14 க்குள் 100 சதவீதமும் இருக்கும்.